தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!
தங்ககட்டிகள் வழிபறி செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் தனக்கு ஒன்றும் தெரியாது என ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் தங்க நகை வியாபாரியான சேட்டன் குமார். இவர் வி.கோட்டா பகுதியில் இருந்து மூன்றரை கிலோ எடையுள்ள ஐந்து தங்க பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய பேரணாம்பட்டுக்கு கடந்த 2 ம் தேதி இரவு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
இதை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று அவருடைய காரை வழிமறித்தது. அந்த கும்பல் சேட்டன் குமாரை மிரட்டி, அவர் வைத்திருந்த தங்க பிஸ்கட்களை கொள்ளையடித்து தப்பி சென்றது. இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்றாம் தேதி காலை தீபக் குமார் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள விகோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஐந்து தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சேட்டன் குமார் அளித்த அடையாளங்களின் அடிப்படையில் ஜெயபால், முகரம், பாபு, சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!
விசாரணையின் போது ஏ ஒன் குற்றவாளி கோலார் நான்காவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஜெயபால் என போலீசாருக்கு தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் பேரணாம்பட்டை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனை அடுத்து தலைமறைவான 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அதில் தலைமறைவானவர் அப்பு (வயது 30) என்பவரும் ஒருவர். இவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அப்பு போலீசுக்கு பயந்து பேர்ணாம்பட்டு கோட்டகாலனியில் சகோதரி வீட்டில் பதுங்கி இருந்தார். போலீசார் தன்னை எப்படியும் கைத் செய்வார்கள் என பயத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பு போலீசுக்கு பயந்து காப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில்தனக்கு எதுவும் தெரியாது. தன்னை திருட அழைத்து சென்றது வேதாச்சலம் உள்ளிட்ட 2 பேர் தான். அவர்கள் தான் என் சாவுக்கு காரணம் என கூறி ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
அப்பு ஆடியோ வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த அப்புவின் உடல் பிரேதபரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்.. அலறிய 4 வயது சிறுவன்.. ஆந்திராவில் அரங்கேறிய சோகம்..!