மோடிஜி... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?... மத்திய அரசையும் விட்டு வைக்காத விஜய்...!
தனது உரையில் மத்திய அரசையும் விட்டு வைக்காமல், குறிப்பாக பிரதமர் மோடியின் பெயரையே நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் தவெக தொண்டர்கள் எதிர்பார்த்தது போலவே இருமொழி கொள்கையில் உறுதி. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. சமூக நீதியை நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என மத்திய, மாநில அரசுகளை நேரடியாக எதிர்க்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என வீராப்பு பேசினால் மட்டும் போதாது என திமுகவை நேரடியாக விமர்சித்து அதிரடி காட்டினார். அதன் தொடர்ச்சியாக தனது உரையில் மத்திய அரசையும் விட்டு வைக்காமல், குறிப்பாக பிரதமர் மோடியின் பெயரையே நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!
மாண்புமிகு திரு மோடிஜி அவர்களே, என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பயம் மாறியும். என்னோட ஒரு படத்துல கூட லியோவ பாக்கணும் லியோவ பாக்கணும் லியோவ பாக்கணும் சொல்லுவாங்களே அந்த மாதிரி பேர சொல்லணும், பேர சொல்லணுங்கிறாங்க. மத்தியில் யார் ஆளுறாங்க, காங்கிரஸா?, தமிழ்நாட்ட யாரு ஆளுறாங்க அதிமுகவா? அப்பறம் என்ன பேர சொல்லணும் பேர சொல்லுன்னு, எனக்கு புரியலையே.
திமுக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி கொள்ளை அடிக்கறதுக்காக ,உங்களோட அதாவது பாஜகவோட மறைமுக அரசியல் கூட்டணி வச்சியிருக்கிறது. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்தறதுக்காகவும், உங்க பேரை சொல்லியே மக்களை பயமுறுத்துறதுக்காகவும் தான். இப்படி இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி, தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி. தமிழ்நாட்டில இருந்து வர ஜிஎஸ்டி கரெக்டா வாங்கிக்கிறீங்க, ஆனா தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்ல நிதி ஒதுக்க மாட்டேங்கறீங்க.
எங்க படிக்கிற பிள்ளைங்களோட படிப்புக்கு நீதி ஒதுக்க மாட்டேங்கறீங்க, ஆனா மும்மொழி கொள்கை திணிக்கிறீங்க. டிலிமிடேஷன் என்ற பேர்ல தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டோட பார்லிமெண்ட் சீட்லயும் கை வைக்க பார்கறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் நீங்க ஸ்டார்ட் பண்ணப்பவே புரிஞ்சிருச்சு பிரதமர் சார், உங்க பிளான் என்னன்னு. நீங்க இந்த நாட்டை எந்த திசையில் இருந்தும் எப்படியெல்லாமும், எங்கெல்லாமும் கொண்டு போலாம், ஆனா தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்புல்லா ஹேண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட். பார்த்து சார், பார்த்து செய்யுங்க சார். மறந்துடாதீங்க சார் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது விஜயின் பேராசை..! தவெக பொதுக்குழுவில் வீராப்பு பேச்சு... கடுப்பான அதிமுக..!