ஐ.நா.சபை தலைவர் கருத்துக்கு இந்தியா பதிலடி...!
காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து ஐநா சபை தலைவர் ஒல்கர் துர்க் கூறிய கருத்துக்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து ஐநா சபை தலைவர் ஒல்கர் துர்க் கூறிய கருத்துக்களுக்கு இந்தியா பதிலடிக் கொடுத்துள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை என்பது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பு. இந்த சபையின் மூலம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காண வலியுறுத்தப்படும்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது..! பாகிஸ்தான் இந்தியா கடும் தாக்கு….
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து ஐநா சபை தலைவர் ஒல்கர் துர்க் பேசி இருந்தார்.வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயரும் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியைநி லைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு இந்தியா சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி பதிலடி கொடுத்துள்ளார்., இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன என கூறினார்.
இந்திய மக்கள் நம்மைப் பற்றிய இத்தகைய தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் தவறு என்று பலமுறை நிரூபித்துள்ளதாக கூறினார். மேலும், இந்தியாவையும், நமது பன்முகத்தன்மை மற்றும் நாகரீக நெறிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மூக்கின் வழியாக கொகைன் உறிஞ்சிய பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!!