பலவீனமான வந்தே பாரத் ரயில்..! மாடு மோதினால்கூட தாங்காது.. ரயில்வே பாதுகாப்பு அறிக்கை..!
மாடு மோதினால்கூட தாங்காதவாறு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயில், எஞ்சின் முகப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், மாடு மோதினால்கூட தாங்கும் சக்தியில்லை என்று ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையம், விமானப்போக்குவரத்து அமைச்சக், ஆகியோர் ரயி்ல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, ரயில்வேதுறை பாதுகாப்பை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வேகத்தை அதிகப்படுத்தினால் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தி இந்து(ஆங்கிலம்) ஏடு வாங்கி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இதையும் படிங்க: இனி பணம் எடுக்க இறங்க வேண்டாம்..! வருகிறது எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி..!
வந்தே பாரத் அதிவிரைவு ரயில் எஞ்சின் பெட்டி மிகவும் பலவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் எஞ்சின் அமைப்பைவிட வலுக் குறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிவேகமாக ரயில் வரும்போது, இருப்புப்பாதையில் மாடு மீது மோதினால்தான் ரயில் எஞ்சின் பகுதி தாங்காத அளவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வந்தேபாரத் ரயில் செல்லும் இருப்புப் பாதையில் மனிதர்கள், கால்நடைகள் சென்று இடையூறு செய்யாத வகையில் ரயில்வே துறை கம்பிவலை அமைக்க வேண்டும். 160 கி.மீ வேகத்தில் ரயில்வரும் போது இருப்புப்பாதைக்கு குறுக்கே யாரும் வராத வகையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
வந்தேபாரத் ரயில்கள் வழக்கமாகச் செல்லும் பாதைகள், கால்நடைகள் வரும் பாதைகளைக் கண்டறிந்து கால்நடைகள், மனிதர்கள் இருப்புபாதைக்குள் வராத வராறு தடுக் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வேதுறை செய்ய வேண்டும், அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினரையும் அமர்த்த வேண்டும். இதுபோன்ற இருப்புப்பாதைகளுக்கு கீழே பாலம் அமைத்தல், அல்லது தொடர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
உள்நாட்டிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயில், சென்னை ஐசிஎப், கபூர்தலா ரயில் கோச் தொழிற்சாலை, ரேபரேலி மார்டன் கோச் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. 2024 டிசம்பர் 26ம் தேதிவரை நாட்டில் 136 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன, 2024ம் ஆண்டில் 62 வந்தேபாரத் ரயில் சேவைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நீண்டதொலைவு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் வந்தே பாரத் ரயில் அறிமுகமாகிய தருணத்தில், ரயில் முகப்பில் ஏராளமான மாடுகள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்தது.
வந்தேபாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது, ஆனால், இப்போதுள்ளநிலையில் அதிவேகம் பயங்கர விபத்துகளை ஏற்படுத்தும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 கி.மீ வேகத்தில் வந்தே பாரத் ரயிலே இயக்கும் முன், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் இருப்புப்பாதையை ஆய்வு செய்ய வேண்டும். 160 கி.மீ வேகத்தில் ரயிலே இயக்கும்போது, சில குறிப்பிட்ட வளைவுகளில் வேகக்கட்டுப்பாடு வைக்க வேண்டும். இதுபோன்ற நிரந்தர அல்லது தற்காலிக வேகக் கட்டுப்பாடுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது லோகோ பைலட்டுகளை தொடர்ந்து மன அழுத்தத்தில் வைத்திருக்கும்.
வளைவுகளை சீராக்கி, இருப்புப் பாதையை எளிமையாக்கி, வேகக் கட்டுப்பாடுகளை குறைத்தபின், 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்னை இல்லத்தின் ஓனர் நடிகர் பிரபு தான்... சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!