அண்ணாமலை புகாரின் பேரிலேயே விகடன் இணையதளம் முடக்கம் - பாஜ மாநில பொருளாளர் தகவல்
அண்ணாமலை புகாரின் பேரிலேயே விகடன் இணையதளம் முடக்கம்
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதற்கிடையே, விகடன் இணையதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து விகடன் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியது. ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு சர்வாதிகார போக்கு எனவும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் விவாதம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வரவில்லை....அண்ணாமலைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆவேச பதில்
இந்நிலையில், இன்று பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையிலான பாஜவினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில், விகடன் ஆசிரியர், நிருபர், வெளியீட்டாளர், கார்ட்டூனிஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.ஆர்.சேகர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘விகடன் பத்திரிகை பிரதமரை கைதி போல் சித்தரித்துள்ளது. இதுதான் கருத்து சுதந்திரமா? இதனை ஏற்று கொள்ள முடியாது. அரசியல் ரீதியாக ஆயிரம் கார்ட்டூன் போடலாம். ஆனால், இது போன்ற கார்ட்டூன் தேசத்தின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல். இதற்கு விகடன் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசிடம் புகார் அளித்ததின் அடிப்படையில்தான் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதையும் படிங்க: கபளீகரம் செய்யும் அண்ணாமலை... பாஜகவில் டென்ஷன்... ஒரே மோடுக்கு வந்த ஸ்டாலின்- எடப்பாடியார்..!