×
 

மதுரையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 பேரின் நிலை என்ன? - வெளியானது பரபரப்பு தகவல்..!

ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற மதுரையைச் சேர்ந்த 68 சுற்றுலா பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சம்பந்தப்பட்ட சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தை அடுத்து ஜம்மு- காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.   ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வேக, வேகமாக வெளியேறி வருகின்றனர். 

இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; விமான நிறுவனங்களுக்குப் பறந்த அதிரடி உத்தரவு!

இந்நிலையில் தமிழ்நாடு மோட்டார் பார்ட் அசோசியேசன் சார்பில் கடந்த வாரம் விமானம் மூலமாக ஸ்ரீநகர் சென்று அங்கு இருந்து ஜம்மு காஷ்மீரில் 5 நாட்கள் சுற்றுலா செல்வதற்காக மதுரையிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் 6 குழந்தைகள் என 68 பேர் சுற்றுலா சென்ற நிலையில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தியதால் அவர்கள் தனியார் தங்கும் விடுதியிலேயே தங்கி உள்ளனர். 

இந்த நிலையில் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற மதுரை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 68 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக உள்ளதாகவும், அவர்கள் வரும் வெள்ளிக்கிழமை மதுரை திரும்ப உள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் சித்தார்த் தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சந்துரு என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஜம்மு காஷ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: ஸ்ரீநகரில் கால் வைத்த அமித் ஷா... ஜம்மு - காஷ்மீர் முதல்வருடன் தீவிர ஆலோசனை... அடுத்து நடக்கப்போவது என்ன? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share