×
 

பாலியல் புகாரில் பெண்கள் சொல்வது உண்மையாகாது... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

பெண்கள் என்பதால் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையாகாது என்று கேரளாவில் நடந்த பாலியல் வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

பெண்கள் என்பதால் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையாகாது என்று கேரளாவில் நடந்த பாலியல் வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. 

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளர் தன் கைகளை பாலியல் நோக்கத்துடன் பிடித்ததாக கூறி புகார் அளித்தார். இந்த புகாரின் படி கைது செய்யப்பட்ட மேலாளர் தொடர்ந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில், அந்த பெண் சரியாக வேலை செய்யாததால் அவரை பணி நீக்கம் செய்ததாகவும், அதனால் தன்னை மிரட்டிய அந்த பெண், வேண்டுமென பாலியல் குற்றத்தை சுமத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. குன்ஹி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அந்த பெண் தன்னை திட்டி அனுப்பிய ஆடியோ பதிவை மேலாளர் சமர்பித்தார். 

இதையும் படிங்க: கருணாநிதி என்னை தலைவராக்கினார்... ஸ்டாலின் என்னை முதல்வராக்குவார்.. காவல் நிலையம் வெளியே சீமான் பஞ்ச்..!

மேலும் அந்த பெண் தன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “ குற்றவியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் புகார்தாரர் என இரு தரப்பில் வழக்கின் விசாரணை இருக்க வேண்டும். புகார் அளித்தவர் பெண் என்பதால் ஒருதலை பட்சமாக அவருக்கு சாதகமாக விசாரணையை நடத்த முடியாது. 

புகார் அளித்தவர் பெண் என்பதால் அவர் சொல்வது அனைத்தும் உண்மை என எந்த ஊகத்திற்கும் வர முடியாது. குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிபப்டையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பாலியல் வன்கொடுமை வழக்குகள் அப்பாவிகளை சிக்க வைக்கும் ஒரு வழியாக உள்ளது.

சில பெண்கள் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகாரை அளிப்பது காவல்துறையால் கண்டறியப்பட்டால் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் பாலியல் வழக்குகளை காவல்துறை விழிப்புணரவுடன் விசாரிக்க வேண்டும் என்ற நீதிபதி, பொய் புகார் அளித்த பெண்ணை கைது செய்யவும், அவருக்கு ரூ.50,000 தொகையில் ஜாமீன் வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. சைகை மொழியால் துயரத்தை சொல்லி அழுகை... சீரழித்த காமுகன் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share