×
 

வன்னியர் சங்க மாநாட்டிற்கு திருமாவுக்கு நேரில் அழைப்பு.. ராமதாஸ் போடும் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?

பாமகவின் சித்தரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்கிறாரா திருமாவளவன் அழைப்புக்கு அவர் சொன்ன பதில் என்ன ராமதாஸ் போடும் கணக்கு என்ன விரிவாக பார்க்கலாம்.

மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பாமகவின் சித்தரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக மாவட்ட செயலாளர் நேரில் அழைத்த நிலையில் அழைப்புதலை பெற்றுக்கொண்ட திருமாவளவன் முக்கிய விஷயங்களை கூறி அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. 

12 ஆண்டுகளுக்கு பிறகு வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநாட்டு பணிகளை கண்காணிக்க மாநாட்டு குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கும் மருத்துவர் ராமதாஸ், கட்சியினருக்கு முக்கிய உத்தரவுகளை போட்டிருந்தார். இந்நிலையில் தான் மாநாட்டில் பங்கேற்கும்படி விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பாமக மாவட்ட செயலாளர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரக்கோணம் வழியாக சென்னை நோக்கி புறப்பட்டார். 

இதையும் படிங்க: பாமக சித்திரை முழு நிலவு மாநாடு..! திருமாவளவனுக்கு அழைப்பு..!

காரில் சென்றபோது எதிரே வந்த ராணிப்பேட்டை கிழக்கு பாமாக்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பூ பழங்கள் அடங்கிய மாநாட்டு அழைப்பிதழை திருமாவளவனிடம் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முறையாக அழைப்பு கொடுத்தார். அப்போது அழிப்பிதழை சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்ட திருமாவளவன் மாநாடு சிறப்பாக நடப்பதற்கான தனது வாழ்த்துகளை பாமக நிறுவன தலைவர் ராமதாஸிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். அத்தோடு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் பாமக சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பாமகவில் முக்கிய தளபதியாக இருந்த வேல்முருகன் பிறகு தனி கட்சி தொடங்கி நடத்தி வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும், இந்த மாநாட்டை வன்னியர் சங்கம் நடத்தினாலும் இது அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும், அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடக்க இருப்பதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் விதமாகவும் இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. தங்களின் வலிமை மற்றும் முக்கியத்துவத்தை மாநாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை உணர்த்தி அதன்படி வலுவான கூட்டணியில் இணைந்து கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ராமதாஸ் திட்டமிட்டு வரும் நிலையில் மாநாடு மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
 

இதையும் படிங்க: பிஜேபியோட கூட்டணி வச்சா இபிஎஸ் கதை அவ்ளோ தான்.. திருமா கணிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share