×
 

ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?

அரசு சார்பில் ஆளுநர் விருந்துக்கு திமுக புறக்கணிக்குமா?

ஆண்டுதோறும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தோழமை கட்சிகளை புறக்கணிக்க சொல்லி விட்டு முதல்வர் மட்டும் தன் சகாக்களுடன் கலந்துக்கொள்வார். கடந்த ஆண்டு இதேபோன்றதொரு சூழ்நிலையில் முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். இந்த ஆண்டு போவார்களா?  

பிரிக்க முடியாதது ஆளுநரும் பிரச்சனையும், பிரிக்க கூடியது தோழமை கட்சிகளின் தேநீர் விருந்து. சொல்லக்கூடாதது தேநீர் விருந்து புறக்கணிப்பு. சொல்லக்கூடியது விருந்தில் கலந்துக்கொள்ள சால்ஜாப்பு, போராட்டத்துக்கு தோழமை கட்சிகள், தேநீர் விருந்துக்கு தமிழக அமைச்சர்கள். இப்படி திருவிளையாடல் வசனம் போல் ஆளுநர் ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மரபுப்படி அறிக்கையை படிக்கிறாரோ இல்லையோ வெளிநடப்பு மட்டும் செய்துவிடுவார். அவர் எம்.எல்.ஏ அல்ல ஆளுநர் என்று அவருக்கு சொல்வதற்குள் ராஜ்பவனுக்கே போய்விடுவார். 

தோழமை கட்சிகளை ஆளுநருக்கு எதிராக போராட அழைப்பு விடுத்து அனுப்பி விட்டு முதல்வரும் அவரது சக அமைச்சர்களும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு சென்று கலந்துக்கொண்டு தோழமை கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். முதல் ஆண்டு ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் இருந்தும் ஆளுநர் விருந்தில் கலந்துக்கொண்டார். இவருடைய கட்சியின் தோழமை கட்சிகள் புறக்கணித்தன. 

இதையும் படிங்க: அண்ணா அறிவாலயத்தில் நாதகவினர்... தாரைத்தப்பட்டை முழக்க வரவேற்பு... 3000 பேரைத் தட்டித்தூக்கிய ஸ்டாலின்! 

அடுத்த ஆண்டு இதேபோல் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் வந்தது. அந்த ஆண்டு தோழமைக்கட்சிகள் போராடின, புறக்கணித்தன. முதல்வர் கலந்துக்கொள்ளவில்லை. ஆனால் சில அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். கடந்த ஆண்டும் இதேபோல் தேசிய கீதம் இசைப்பதில் வந்த பிரச்சனை காரணமாக ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அதேப்போன்று கடந்த ஆண்டும் பல்வேறு பிரச்சனைகளில் தோழமை கட்சிகள் வழக்கம் போல் வெளியில் நிற்க திமுகவும் புறக்கணிக்கும் என அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள மாட்டோம் என அறிவித்தனர். 

ஆனால் முதல்வர் ஸ்டாலின்,  மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி, இன்னும் பல அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். திமுக போகவில்லை, அரசு போனது என்கிற இந்த வினோத விளக்கத்தை தோழமை கட்சிகள் வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டனர். ஆனால் தொடர்ந்து முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார். இந்த பாலிசி ஏன் அங்கு வரவில்லை?  இந்த ஆண்டும் ஆளுநர் வழக்கம் போல் மரபு மாறாமல் வெளிநடப்பு செய்துவிட்டார். அவர் பணி முடிந்தது. ஒன்றுமே நடக்காதது போல் குடியரசு தின விழாவில் கொடி ஏற்றுவார். ஒன்றுமே நடக்காததுபோல் முதல்வரும் வரவேற்பார். அதெல்லாம் சரிதான் அதை செய்ய வேண்டும் என்பதுதான் சரி. 

ஆனால் மாலை நடக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்போம் என திமுகவின் தோழமைக்கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால் திமுக இன்னும் அறிவிக்கவில்லை. சமீப காலமாக திமுகவும் பாஜகவும் ஒரே தொனியில் பேசி வருகின்றன. பரந்தூர் விவகாரத்தில் அரசின் முடிவை அண்ணாமலையும் ஆதரிக்கிறார். ஒரே குரலில் இருவரும் விஜய்யை நோக்கி பேசுகின்றனர். அதேபோல் பல விவகாரங்களில் பாஜகவுடன் மறைமுகமாக திமுக கைகோர்க்கிறது என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. 

இந்நிலையில் இதுவரை திமுக புறக்கணிப்பு பற்றி அறிவிக்கவில்லை. நாளை அறிவிக்கலாம். ஆனால் கடந்த ஆண்டைப்போல் திமுக புறக்கணிக்கிறது, ஆனால் முதல்வராக போனேன், அமைச்சர்களாக சென்றோம் என்று முதல்வர் சொல்வாரா என்பதே தற்போதைய கேள்வி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். திமுக புறக்கணிக்குமா? முதல்வர் புறக்கணிப்பாரா? என்பதே இப்போதுள்ள கேள்வி.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. பெருமையில் துள்ளிக் குதிக்கும் அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share