திருநெல்வேலி டவுண் குருநாதன் கோவில் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு மர்ம நபர்கள் மூலம் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் குருநாதன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சல்லடை சல்லடையாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில் சடலம் ஏதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தகவல் கொடுத்த மர்ம நபர்கள் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை கண்டறியும் வேலையிலும் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில் கொலை குறித்த தகவல் அளித்த இளம் சிறார்களை போலீசார்கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணை, அடிப்படையில் குருநாதன் கோவில் அருகே முப்புதரில் உடல் புதைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. நள்ளிரவில் போலீசார் உடலை தோண்டி எடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆறுமுகம் என்பது தெரிந்தது. அவர் கட்டிட தொழிலாளி என்பதும் கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: தங்கக்கட்டிகள் வழிப்பறி வழக்கு.. போலீஸ் தேடியவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலை..!

இந்த விவகாரம் தொடர்பாக மூன்று இளம் சிறார் உட்பட நான்கு பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆறுமுகம் என்பவருக்கும் கைது செய்யப்பட்ட இளம்சிறார் ஒருவருடைய உறவினரான சகோதரிக்கும் இடையே காதல் விவகாரம் இருந்து உள்ளது. மைனர் பெண்ணான தனது சகோதரியை ஆறுமுகம் காதலித்தது குறித்து இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கவே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் கூறினர்.

காதல் விவகாரத்தல் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. பகையை மனதில் வைத்து, ஆறுமுகத்தை இளம் சிறார்கள் மது குடிக்க அழைத்துச் சென்று உள்ளனர். மது குடிக்க சென்ற இடத்தில் தனது சகோதரியை விட்டு விலகி விடும்படி ஆறுமுகத்திடம் பிரச்னை செய்துள்ளனர்.
அங்கு வாக்குவாதம் முற்றி கைகலப்பானதும் 4 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி அங்கு உள்ள முட்புதூரில் குழி தோண்டி புதைத்ததை உள்ளனர். மேலும் இதை தகவவலாகவும் போலீசாரிடமே தெரிவித்துள்ளனர். இளம் சிறார் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!