×
 

இரட்டை இலை சின்­னத்­துக்காக இரையாகிப்போன எடப்பாடியார்… காலை வாரக் காத்திருக்கும் 3 சிக்கல்கள்..!

மோதல் ஏற்­ப­டு­வது என்­பது வேறு, ஆனால் சசி­க­லா­வையே நீ யார் என்று கேட்­கும் அள­வுக்கு துரோ­கி­யாக மாறி­னார் பழ­னி­சாமி.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 'கொத்தடிமை எடுத்த கொள்கை முடிவு'' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், ''சில நாட்­க­ளாக நிதா­னம் இல்­லா­மல் இருந்­தார் எடப்­பாடி பழ­னி­சாமி. அவ­ரது நட­வ­டிக்­கை­கள் மர்­ம­மாக இருந்­தன. அதை விட அவ­ரது பேச்­சு­க­ளும், எதையோ மறைக்­கச் செய்­யும் செயல்­களா­க­வும் இருந்­தன. பா.ஜ.க. தலைமை தன்னை    மிரட்­டுவதை மறைக்­கவே இப்­படி எல்­லாம் நாட­கம் ஆடி இருக்­கி­றார் பழ­னி­சாமி என்­பதை உறுதி செய்து விட்­டார் அமித்ஷா.

பா.ஜ.க. எந்த இரைக்­காக காத்­தி­ருந்­ததோ அந்த இரை­யாக ஆகிவிட்­டார் பழ­னி­சாமி. அவ­ருக்கு வேறு வழி­யில்லை. அவ­ரது சிக்­கல்­களை அவரே நன்கு அறி­வார். பொதுச் செய­லா­ளர் நாற்­கா­லி­யில் பழ­னி­சாமி அமர வைக்­கப்­பட்­டா­லும், அவர்  அனை­வ­ரா­லும் ஏற்­கப்­பட்ட பொதுச்­செ­ய­லா­ளர் அல்ல. அவ­ருக்கு எதி­ரான ஒரு கூட்­டம் அவ­ரைச் சுற்­றி­லுமே இருந்து கொண்டு இருக்­கி­றது. பழ­னி­சா­மி­யின் நாற்­கா­லி­யில் உட்­கார அவ­ரைச் சுற்றி இருக்­கும் நான்­கைந்து பேரே திட்­ட­மிட்­டுக் காத்­தி­ருக்­கி­றார்­கள். இதில் இரண்டு பேரை பா.ஜ.க. தலை­மையே ஊக்­கம் கொடுத்து வளர்த்­தும் வரு­கி­றது. இது  பழ­னி­சா­மிக்கு இருக்­கும் முதல் சிக்­கல்.

இதையும் படிங்க: அவமானப்படுத்திய இபிஎஸ்... அப்செட்டில் ஆர்.பி.உதயகுமார்... சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக...! 

தொடக்­கத்­தில் இருந்தே சசி­கலா, தின­க­ரன், பன்­னீர்­செல்­வம் ஆகிய அணி­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர் பழ­னி­சாமி. முத­லில் பழனி­சா­மியை முத­ல­மைச்­சர் ஆக்­கி­ய­வரே சசி­க­லா­தான். சசி­கலா காலை நோக்கி ஊர்ந்து போய் தொட்டு வணங்­கி­னார் பழ­னி­சாமி. அவரே, ‘நீ எனக்கு பதவி வாங்கி கொடுத்­தியா? நீ ஏன் அ.தி.மு.க.வுக்கு உரிமை கொண்­டா­டுற?’ என்று     சசி­க­லாவை ஒரு­மை­யில் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார் பழ­னி­சாமி. கப்­பம் கட்­டு­வ­தில் தேர்ந்­த­வர் என்­ப­தால்­தான்        பழ­னி­சா­மிக்கு அந்­தப் பத­வி­யையே கொடுத்­தார் சசி­கலா. மோதல் ஏற்­ப­டு­வது என்­பது வேறு, ஆனால் சசி­க­லா­வையே நீ யார் என்று கேட்­கும் அள­வுக்கு துரோ­கி­யாக மாறி­னார் பழ­னி­சாமி.

தின­க­ர­னுக்­காக வாக்­குச் சேக­ரித்­த­வர்­தான் பழ­னி­சாமி. அதன்­பிறகு தின­க­ரனை உதா­சீ­னப்­ப­டுத்­தி­னார் பழ­னி­சாமி. தன்னை வலி­மைப் படுத்­திக் கொள்­வ­தற்­காக பன்­னீர்­செல்­வத்தை முத­லில் சேர்த்­துக் கொண்ட பழ­னி­சாமி, அதன்­பி­றகு அவ­ரை­யும் தூக்கி எறிந்­தார். இவர்­கள் அனை­வ­ரும், பா.ஜ.க. பக்­க­மாக இருந்து குடைச்­சல் கொடுத்­துக் கொண்டு  இருக்­கிறார்கள்.  அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ளர் என்று சசி­க­லா­வும் சொல்­கி­றார். அ.தி.மு.க. என் வசம் இருக்­கி­றது என்று பன்­னீர்­செல்­வ­மும் சொல்­கி­றார். இவை அனைத்­தும் இரட்டை இலை சின்­னத்­துக்கு சிக்­கல் ஏற்­ப­டுத்­து­கி­றது. அ.தி.மு.க.வை தன் வசம் வைத்­தி­ருந்­தா­லும் இரட்டை இலை சின்­னம் கிடைக்­காது என்ற சிக்­கல் பழ­னி­சா­மிக்கு ஏற்­பட்­டுள்­ளது. இது    இரண்­டா­வது சிக்­கல் ஆகும்.

சசி­கலா, தின­க­ரன், பன்­னீர்­செல்­வம் ஆகிய மூவ­ரும் பா.ஜ.க.வின் கஸ்­ட­டி­யில்­தான் இருக்­கி­றார்­கள். இவர்­களை     அ.தி.­மு.­க.­வுக்­குள் சேர்க்கச் சொல்லி பழ­னி­சா­மிக்கு நெருக்­கடி கொடுக்­கி­றது பா.ஜ.க. தலைமை. ‘இவர்­கள் கட்­சிக்­குள் வந்­தால் தனது தலைமை கேள்­விக்­குறி­யா­கும்’ என்று பயந்­து­                   போ­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி. இது அவ­ருக்கு ஏற்­பட்­டுள்ள  மூன்­றா­வது சிக்­கல்.

பா.ஜ.க.வுடன் கூட்­டுச் சேர்ந்­தால் அ.தி.மு.க.வுக்கு இருக்­கும் வாக்கு­கள் கூட விழாது என்­பதை அறி­யா­த­வர் அல்ல பழ­னி­சாமி. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போதே டெல்லி சென்று பிர­த­மர் மோடி அரு­கில் நின்று கூட்­ட­ணியை உறுதி செய்து வந்த பழ­னி­சாமி, தேர்தல் நெருக்­கத்­தில் பா.ஜ.க.வை கழற்றி விட்­டார். எனவே, பழ­னி­சா­மியை பா.ஜ.க. தலைமை   நம்­பத் தயா­ராக இல்லை. கடி­வா­ளம் போட்டு கட்­டிப் போடத் திட்­ட­மிட்டு - தனது வழக்­க­மான ரெய்டு பாணியைக் கையில் எடுத்­தது பா.ஜ.க..

கடந்த ஜன­வரி மாதம் ரெய்டு அஸ்­தி­ரத்தை பா.ஜ.க. எடுத்­தது. பழ­னி­சா­மி­யின் உற­வி­னர்­க­ளுக்­குச் சொந்­த­மான 26     இடங்­க­ளில் ரெய்டு நடந்­தது. ‘எடப்­பா­டிக்கு செக் - உற­வி­னர் வீட்­டில் தொட­ரும் ஐ.டி. ரெய்டு’, ‘எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உற­வி­னர் வீட்­டில் ஐந்­தா­வது நாளாக வரு­மான வரித்­துறை ரெய்டு’, ‘எடப்­பாடி உற­வி­னர் வீட்­டில் இறங்­கிய ஐ.டி. அதி­கா­ரி­கள்’, ‘எடப்­பாடி உற­வி­னர் வீட்­டில் விடிய விடிய ரெய்டு’, ‘கூட்­ட­ணிக்கு குறி வைக்­கப்­ப­டு­கி­றாரா எடப்­பாடி?’, ‘வச­மாக சிக்­கிய எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உற­வி­னர்’, ‘எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உற­வி­னர் வீட்­டில் சிக்­கி­யது என்ன?’, ‘750 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்­பா­டி­யின் உற­வி­னர்’, ‘உற­வி­ன­ரின் வரி ஏய்ப்பு - எடப்­பா­டிக்கு சிக்­கல்’, என்று       ஊட­கங்­கள் அனைத்­தும் செய்தி வெளி­யிட்­டன. ‘முத­லுக்கே மோசம் வந்­து­விட்­டது’ பழ­னி­சா­மிக்கு.    இது­தான் அவரை பா.ஜ.க.வை நோக்கி பணிய வைத்­துள்­ளது.

‘இந்த ரெய்­டு­கள் அனைத்­தும் அ.தி.மு.க.வுடன் கூட்­டணி வைப்­பதற்­கான பா.ஜ.க.வின் அழுத்­தங்­கள் ஆகும்’ என்று அனைத்து ஊட­கங்­க­ளும் எழு­தி­யது. ரெய்டு நடந்த காலக்­கட்­டத்­தில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் நடந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது சட்­ட­மன்­றத்­துக்கு வரா­மல் வீட்­டில் முடங்­கிக் கிடந்­தார் பழ­னி­சாமி. இதில் இருந்து தப்­பு­வ­தற்­கா­கத்­தான் பா.ஜ.க.வின் மடி­யில் தஞ்­சம் அடைய வேண்­டிய நெருக்­கடி பழ­னி­சா­மிக்கு வந்­தது. மிகப்­பெ­ரிய பிரச்­சினை என்­பது இது­தான்.

தனது தலை­மைக்­கும் பிரச்­சினை. தனது இருப்­புக்­கும் பிரச்­சினை. இரட்டை இலைக்­கும் பிரச்­சினை. தனது குடும்­பத்­துக்­கும் பிரச்­சினை. தனது சொத்­துக்­கும் பிரச்­சினை. பாவம் பழ­னி­சாமி என்ன செய்­வார். கொத்­த­டி­மை­யாய் இருக்க,  கோடிக்­க­ணக்­கான அ.தி.மு.க. தொண்­டர்­களை அட­மா­னம் வைத்­து­விட்­டார். அத­னைத்­தான் அறி­விக்க வந்­தார் அமித்ஷா.

‘கூட்­ட­ணிக்­கும் கொள்­கைக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்­லீங்க’ என்­பது பழ­னி­சா­மி­யின் அரி­ய­வகை அர­சி­யல் தத்­து­வம் ஆகும். அதற்கு அவரே சாட்­சி­யா­க­வும் ஆகி­விட்­டது. சொன்­னது போல நடப்­ப­து­தான் அவ­ரது வழக்­கம்'' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share