×
 

உன்னை எப்படிம்மா கட்டிப்பிடிப்பேன்..? போரின் ரணத்தை உலகிற்கு உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்..!

அவரது கைகள் துண்டிக்கப்பட்டதை முதலில் உணர்ந்தபோது.'அவன் முதல்ல சொன்னது... 'நான் எப்படி உன்னை கட்டிப்பிடிக்க முடியும்'ன்னுதான்.

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் கொடூரத்தை உணர்த்தும் புகைப்படம் ஒன்று 2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. காசா நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் தனது இரு கைகளையும் இழந்த 9 வயது பாலஸ்தீன சிறுவனின் கொடூரமான புகைப்படம் இது. இந்தப் புகைப்படம் நேற்றுக்கு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளுக்காக புகைப்படப் பத்திரிகையாளர் சமர் அபு எலூஃப் எடுத்தார். இதில் காணப்படும் பாலஸ்தீன சிறுவனின் பெயர் மஹ்மூத் அஸ்ஜூர்.

விருதை வென்ற பிறகு புகைப்படம் பற்றி நினைவு கூர்ந்த அபு எலூஃப், ''மஹ்மூத்தின் தாயார் எனக்கு பல கடினமான விஷயங்களைச் சொன்னார். அவற்றில் ஒன்று அவரது கைகள் துண்டிக்கப்பட்டதை முதலில் உணர்ந்தபோது.'அவன் முதல்ல சொன்னது... 'நான் எப்படி உன்னை கட்டிப்பிடிக்க முடியும்'ன்னுதான்.

இதையும் படிங்க: இந்துக்கள் கோயில் உண்டியலில் காசுபோடுவதை தடுக்க மோடி சட்டம் போடுவாரா..? சு.வெ சுளீர்..!

கடந்த ஆண்டு இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, மஹ்மூத் அஜூர் கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காசாவில் இஸ்ரேலின்  இந்த தாக்குதல் நடந்தது. இதுவரை குறைந்தது 51,025 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. அதே நேரத்தில், தோராயமாக 116,432 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக, முழு காசா பகுதியும் இடிபாடுகளாக மாறிவிட்டது.

விருது பெற்ற புகைப்படத்தை எடுத்த சமர் அபு எலூஃப் காசாவைச் சேர்ந்தவர். ஆனால் டிசம்பர் 2023-ல் வெளியேற்றப்பட்டார். அவர் இப்போது தோஹாவிற்கு வரும் காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் புகைப்படம் எடுக்கிறார். "இது சத்தமாகப் பேசும் ஒரு அமைதியான புகைப்படம்" என்று வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோவின் நிர்வாக இயக்குனர் ஜுமானா எல் ஜீன் கௌரி கூறினார். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது. அதே நேரத்தில் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது.

இதையும் படிங்க: உங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகள் மீது கவனம் செலுத்துங்கள்.. வங்கதேசத்தை விளாசிய இந்தியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share