×
 

குடையை மறந்துடாதீங்க மக்களே.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 2 மணி நான்கு நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் பகலில் வெயிலும் இரவில் பனிப்பொழிவுமான சூழல் நிலவி வந்தது. இது ஒரு புறம் இருக்க இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரத்தில்  பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் ஆறாக ஓடி நகராட்சி முன்பு மழை நீர் தேங்கியது.

கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதக்கிய நிலையில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. மேலும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பவோர் திடீரென பெய்த மழையால் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். முன்னதாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரளாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர் இராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சுற்றுலா பயணிகளே உஷார்.. கொடைக்கானலுக்கு போறதா இருந்தா இத தெரிஞ்சிட்டு போங்க.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வழியுள்ள தகவலில் தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரங்களில் லேசான பணிமோட்டம் காணப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இந்த நிலை வருகின்ற மார்ச் 1ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னர் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எம்.பி.யாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! மோடிக்கு இனி தலைவலி தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share