கிராமங்களில் உள்ள மக்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் சராசரியாக ஒருவருக்கு 44.62 நாட்கள்தான் 2024-25ம் ஆண்டில் வேலைதரப்பட்டுள்ளது, இது 2023-24ம் ஆண்டில் 52 நாட்களாக இருந்தது என்று தன்னார்வத் தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.
2023-24ம் ஆண்டைவிட, 2024-25ம் ஆண்டில் வேலை நாட்களை 8 நாட்கள் குறைத்துள்ளது, வரும் நிதியாண்டிலும் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு அதிகப்படுத்தவில்லை. 2024-25ம் ஆண்டில் ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில் அதே தொகையைத்தான் வரும் நிதியாண்டிற்கும் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகநலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இணைந்த அமைப்பான என்ஆர்இஜிஏ சங்கார்ஸ் மோர்ச்சா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2024-25ம் நிதியாண்டில் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே அளவான ரூ.86 கோடியைத்தான் வரும் நிதியாண்டுக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசுஒதுக்கியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
திட்டமிட்டே கிராமப்புறத் தொழிலாளர்களை மத்திய அரசுஒதுக்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி ரூ.9860 கோடி பற்றாக்குறை இருக்கிறது, இதில் ஊதிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.6,948.55 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20சதவீதம் கடந்த கால நிலுவையை சரி செய்யப் பயன்படும்.
அப்படியிருக்கையில் 2025-26 நிதியாண்டுக்கான தொகை ரூ.70ஆயிரம் கோடிதான். பணவீக்கத்துக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட்டநிலையில் 2023-24ம் நிதியாண்டைவிட ரூ.4 ஆயிரம் கோடி குறைவாக 0.24 சதவீதம் குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்காததால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படும், கிராம்புறத் தொழிலாளர்களிடையே மனஅழுத்தம் உருவாகும், வேலைக்கான தேவையை குறையும், வேலைக்கான மக்களின் உரிமை மறுக்கப்படும், கிராமப்புற கட்டமைப்பு பலவீனப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ முக்கியமான பாதுகாப்பு வலையை” மத்திய அரசு புறக்கணிப்பது, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மீதான அதன் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. 100நாட்கள் வேலைத் திட்டத்தின் வரம்பைக் குறைத்தால், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை கிராமப்புற தொழிலாளர்களை சிக்கித் தவிக்கிறார்கள்.
இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வைத் தடுக்கிறது. இந்த நடப்பு நிதியாண்டில் கூட, நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 5% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச சராசரி ஊதிய விகிதம் 7% மட்டுமே அதிகரிக்கப்பட்டது. எனவே, தேசியப் பிரச்சினையான ஊதிய மந்தநிலையின் அடிப்படைக்கு 100 நாட்கள் வேலைத்திட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ஜன்னல், தாடி, மெழுகு வர்த்தி, ஏன்....'பேச்சலர்' வாழ்க்கைக்கும் வரி; சுவாரஸ்ய தகவல்கள்