2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதல் நடத்த மூளையாக இருந்து உதவிகள் செய்தவர் தஹாவூர் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, “இந்தியாவில் இருந்து அரசு விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் குழு, அமெரிக்காவுக்குச் சென்று, ராணாவை அழைத்து வர அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து அனைத்துவிதமான சட்டரீதியான பணிகளையும் முடித்துவிட்டன, ஆதலால், ராணாவை இந்தியாவுக்கு மிகவிரைவாக அழைத்து வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன இது எப்போது என உறுதியாகக் கூறமுடியாது” எனத் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சாட்சி விசாரணையை தடையின்றி நடத்துங்கள்.. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு..!
தஹாவூர் ராணா தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து, ராணாவை இந்திய அதிகாரகளிடம் ஒப்படைத்து விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டது.

64வயதான ராணா தற்போது லாஞ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள சிறையில் இருக்கிறார். அங்கிருந்தவாரே கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி, ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தில் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தடைகோரியிருந்தார்.
அந்த மனுவில் ராணா “ தனக்கு பல்வேறுவிதமான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும், இந்தியாவுக்குச் சென்றால் மரண தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவி்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் 2024 ஜூலை மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி தனக்கு உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் இருப்பதாகவும், இதயநோய், பார்க்கின்சன் நோய், ரத்துப்புற்றுநோய், சிறுநீரகக்கோளாரு, ஆஸ்துமா மற்றும் கொரோனா தொற்றால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆதலால் இந்தியாவுக்கு அவைத்துச் செல்ல தடைவிதிக்கக் கோரியிருந்தார்.
மேலும், இந்திய அதிகாரிகளிடம் நான் ஒப்படைக்கப்பட்டால் தன்னை கொடுமைப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், ஏனென்றால் நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர், முன்னாள் ராணுவ வீரர் என்பதால் இந்தக் கொடுமைகள் நடக்கலாம் என அச்சம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் ராணாவின் மனுவை நிராகரித்து, அவரை இந்தியாவில் சென்று விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது.
பாகிஸ்தானை பூர்வீமாகக் கொண்ட தஹாவூர் ராணா கனாடா நாட்டு குடியுரிமைபெற்றவர். பாகிஸ்தான் அமெரிக்க குடியுரிமை பெற்ற டேவிட் கோல்மென் ஹெட்லியுடன் நெருக்கமாக ராணா இருந்தார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து ராணாவை நாடுகடத்தும் விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். அதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், கொடுமைக்கார ராணா, இந்தியாவுக்கு சென்று நீதிவிசாரணையை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த பெல் ஊழியர்..! கொத்தாக தூக்கிய NIA