காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் கல்லூரி மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் கே.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவருடைய மகள் நித்தியரூபிணி நிலக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரூபிணிக்கும், பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த உறவினரான சுப்பையா மகன் ஜெயசீலன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சில ஆண்டுகளாக ஒருவரை, ஒருவர் காதலித்து வந்தனர். இருவரின் காதலை தெரிந்து கொண்ட பெற்றோர் திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜெயசீலம் திருப்பூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஜெயசீலன் வேலை செய்து வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய ஜெயசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!
திருமணத்துக்கு ஏற்பாடு செய்த உறவினர்கள் ஜெயசீலனுக்கு நேர்ந்ததை நினைத்து சோகத்தில் அழுதனர். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஜெயசீலனை சடலமாக பார்த்த ரூபிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். அன்று முழுவதும் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். அவரது மன உளைச்சல் தவறான முடிவை எடுக்க வைத்துள்ளது.

தொடர்ந்து மன வேதனையில் இருந்த ரூபிணி இரவு வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற நிலக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் ரூபிணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் இறந்த துக்கத்தில் நர்சிங் மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்பத்தியது.
இதையும் படிங்க: பூனைக்காக அக்கப்போரா? - உயிரையே விட்ட பெண்!!