குஜராத்தில் ஜாம் நகரில் உள்ள அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி பாதுகாப்பு திட்டமான வன்தாராவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். இது உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமாகும். 3,500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பாதுகாப்பு மையம், மீட்கப்பட்ட மற்றும் அழிந்து வரும் விலங்குகளுக்கு அடைக்கலமாக செயல்படுகிறது.

சுமார் ஒன்றரை லட்சம் விலங்குகள் பாதுகாக்கப்படும் அந்த மையத்தில் நிபுணர்களின் பராமரிப்பையும் அவை செழித்து வளர இயற்கை சூழலும் உலக தரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பானியின் பிரம்மாண்ட வன்தாரா.. சிங்கக்குட்டிகளை கொஞ்சி பிரதமர் மோடி உற்சாகம்..!
பிரதமர் மோடி தனது வருகையின் போது, வன்தாரா விலங்குகள் பாதுகாப்பு மையத்தின் முக்கிய வசதிகளை பார்வையிட்டார். இது குறித்து பிரதமர் மோடி தனது x பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஒரு பெண் சிங்கம் வாகனத்தில் மோதியதில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு சரியான பராமரிப்பு அளிக்கப்பட்டுள்ளது தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஒரு சிறுத்தை குட்டிக்கு சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மூலம் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது .

இதுபோன்ற பல விலங்குகளுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புக்காக வன்தாரா குழுவை நான் பாராட்டுகிறேன். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அங்கோலாவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சீல், தற்போது அதன் புதிய பாதுகாப்பான வீட்டில் இருப்பது போல் சந்தோஷமாக விளையாடியது. இந்த கடல் பாலூட்டிகள் பெரும்பாலும் வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக பாதிக்கப்படுகின்றன. இப்போது, வந்தாரா குழுவின் நிபுணர் பராமரிப்பின் கீழ், இந்த சீல் ஒரு பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தின் அமைதியை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விலங்குகள் மருத்துவமனை பகுதிக்கு சென்ற மோடி உருக்குத்துடன் நிகழ்ச்சியோடும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டார்.

மருத்துவமனையில் உள்ள MRI அறைக்குச் சென்ற பிரதமர், ஒரு ஆசிய சிங்கத்திற்கு MRI ஸ்கேன் எடுப்பதைக் முழுவதுமாக நின்று பார்த்தார். நெடுஞ்சாலையில் ஒரு கார் மோதிய பின்னர் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுத்தை, மீட்கப்பட்ட பின்னர் இங்கு கொண்டு வரப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கையும் அவர் பார்வையிட்டார்.

இந்த மையத்தில் மீட்கப்பட்ட விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தை நெருக்கமாக பிரதிபலிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பாதுகாப்பு முயற்சிகளில் சில ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்றவை அடங்கும்.
அவர் தங்கப் புலி, சகோதரர்களான 4 பனிப்புலிகள், வெள்ளை சிங்கம் மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவற்றை நேருக்கு நேர் கண்ணாடிகளுக்கு இடையே பார்த்து விளையாடி மகிழ்ந்தார்.
திறந்தவெளியில் சிம்பன்சிகளை நேருக்கு நேர் சந்தித்த மோடி, அவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. ஒராங்குட்டான்களுடன் கட்டிப்பிடித்து அன்பாக விளையாடினார். நீருக்கடியில் இருந்த ஒரு நீர்யானையை அருகில் பார்த்தார். முதலைகளைப் பார்த்தார், வரிக்குதிரைகளுக்கு இடையில் நடந்து சென்றார், ஒரு ஒட்டகச்சிவிங்கி மற்றும் ஒரு காண்டாமிருகக் கன்றுக்குட்டிக்கு உணவளித்தார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகக் கன்று, அதன் தாய் இறந்துவிட்டதால் அதை கொண்டு வந்து இங்கு நன்றாக வளர்த்து வருகின்றனர். அதற்கு மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு தனித்துவமான இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை, டாபிர்ஸ், சிறுத்தை குட்டிகள் ஆகியவற்றை விவசாய நிலத்தில் விட்டுவிட்டு, பின்னர் கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன, ஜெயண்ட் ஓட்டர்ஸ், போங்கோ (மான்) மற்றும் சீல்கள் ஆகியவற்றையும் அவர் கண்டார். யானைகளை அவற்றின் ஜக்குஸியில் குளிப்பதைக் கண்டு மோடி ரசித்தார்
பல மணி நேரம் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவு உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையமான வன்தாராவில் மோடி சுற்றிப் பார்த்து விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையை கண்டு வியந்தும் உருகியும் போனார்
இதையும் படிங்க: காட்டு சிங்கங்களை நேருக்கு நேர் சந்தித்த மோடி..! ஸ்டைலா கெத்தா போஸ்.!