இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வந்திருந்தார். இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் உண்டு. வழக்கமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். ஆனால், தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றுள்ளார்.எனக்குத் தெரிந்தவரை அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்" என்று ராவத் தெரிவித்தார். சஞ்சய் ராவத்தின் கருத்து இந்திய அளவில் பேசுபொருளானது.
இதையும் படிங்க: காங்கிரசால் தான் நக்சலிசம் வளர்ந்தது..! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர்..!

ஆனால், சஞ்சய் ராவத்தின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "2029-ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடியையே பிரதமராக நாடு பார்க்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் என்பது நவீன கால ‘பழமையான அழியாத ஆலமரம்’.. பிரதமர் மோடி புகழாரம்..!