கரூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று மாலை தனது காரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி அவரது ஓட்டுநர் ஜோதி என்பவருடன் சென்றுள்ளார்.
அப்போது அவிநாசிப்பாளையம் அடுத்த சம்பந்தம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த கார் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. மேலும் உங்களது காரை சோதனை செய்ய வேண்டும் என்று மூன்று பேர் வெங்கடேசன் காரில் ஏறி உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவிநாசிபாளையம்-தாராபுரம் சாலையில் செல்லுமாறு மூவரும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து எங்குமே நிறுத்தாமல் சென்ற கார், வேங்கி பாளையம் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது காரை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த ரோடு ரோலர்.. லாவகமாக சுருட்டிய மூவர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்!
இதனை அடுத்து, வெங்கடேசன் இரு பைகளில் வைத்திருந்த சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரொக்க பணம் மற்றும் மூன்று செல்போன்களையும் வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு அங்கிருந்து வேறொரு காரில் தப்பியுள்ளனர்.

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட வெங்கடேஷ் மற்றும் ஓட்டுநர் இது குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்ரு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்களை கண்டறிவதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு.. ஜாமின் கோரும் சப்-இன்ஸ்பெக்டர்கள்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு..!