×
 

Prabhu Ganesan: நடிகர் பிரபுவுக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை; என்ன ஆனது? பதறும் ரசிகர்கள்!

நடிகர் பிரபுவிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என பதற்றத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் பிரபு கணேசன்:

வாரிசு நடிகர்களில் ஒருவரான பிரபு பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு எத்தனையோ படங்களில் ஹீரோவாகவும் - குணசித்ர வேடத்திலும் நடித்துள்ளார். இவரது தந்தையான சிவாஜி கணேசனுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில்  முன்னணி ஹீரோவாக நடித்த பிரபு, தனக்கென்று தனி ஸ்டைல், நடை, பாவணை வைத்துள்ளார்.அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளையாக சினிமாவில் அறியப்படும் பிரபுவுக்கு,  தராசு என்ற படத்தின் மூலம் இளைய திலகம் என்ற அடைமொழி கிடைத்தது.

அடையாளப்படுத்திய படங்கள்:

கடந்த 1982 அம் ஆண்டு திரைக்கு வந்த சங்கிலி என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பிரபுவிற்கு குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம், தர்மத்தின் தலைவன், வெற்றி விழா, சின்ன தம்பி, பசும்பொன் ஆகிய படங்கள் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.  ரஜினியுடன் இணைந்து பல படங்களில் பிரபு நடித்திருந்தாலும் இப்போது பிரபு குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். வாரிசு, பிடி சார் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்தன. இப்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் பிரபு நடித்துள்ளார். இது பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் திரைப்படம் ஆகும் 

குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் தன்னுடைய உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டி வந்த பிரபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Keerthy Suresh: குட்டை டவுசரில் ஹனிமூன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகு போட்டோஸ்!

பிரபுவுக்கு நடந்த அறுவை சிகிச்சை ஏன்?

நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மபிரபலமான மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரபு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் தொற்று மற்றும் தலைவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபுவிற்கு தமதியின் மேல் பகுதியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இப்போது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரபு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பின் கூடிய அழகு! ரம்யா பாண்டியன் பகிர்ந்த ஹனி மூன் போட்டோஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share