திருமணத்திற்கு பின் கூடிய அழகு! ரம்யா பாண்டியன் பகிர்ந்த ஹனி மூன் போட்டோஸ்!
திருமணம் ஆகி ஹனி மூன் சென்றுள்ள நடிகை ரம்யா பாண்டியன், வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமாவில், வாய்ப்பு கிடைக்காததால், கடந்த ஆண்டு காதலர் லவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் ரம்யா பாண்டியன்.
திருமணம் முடிந்த கையேடு, கணவருடன் எடுத்து கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன், பின்னர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஹனிமூன் சென்ற இடத்தில் ரம்யா பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் கிறிஸ்துமஸ்!
தற்போது தன்னுடைய கணவருடன் ஹனிமூனுக்கு, பாங்காங் சென்றுள்ள ரம்யா அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே இவர் வெளியிட்ட புகைப்படங்கள், படு வைரலாக பார்க்கப்பட்ட நிலையில்... தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில், சோலோவாக வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் தலையில் லைட் எரியும் கிளிப்புடன் இவர் கொடுத்துள்ள போஸ் தான் செம்ம ஹைலைட்.
ரம்யா பாண்டியன் கைவசம் தற்போது 'இடும்பன்காரி' என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து ரம்யா விலக உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் திருமணம் செய்து கொண்டுள்ள லவல் தவான் குடும்பம், பஞ்சாபில் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. சுமார் 60 லேப் வைத்து நடத்தி வருகிறார்கள்.
லவல் தவான் தன்னுடைய தொழில்களை கவனித்து வருவது மட்டும் இன்றி, யோகா இன்ஸ்ட்ரெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹனி மூன் போன இடத்தில் கணவரை கழட்டிவிட்டுட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த முத்தம் யாருக்கு தெரியுமா?