அந்த தியாகி யார்?... அடித்து நொறுக்கும் போஸ்டர்கள்... டெல்லியில் இருந்து வந்த கையோடு திமுகவின் ஜோலியை முடித்த எடப்பாடி...!
1000 கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலுக்கு காரணமான அந்த தியாகி யார் என்று குறிப்பிட்டு சென்னை நகரில் அதிமுக ஐடிவிங்கின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசார் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1000 கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலுக்கு காரணமான அந்த தியாகி யார் என்று குறிப்பிட்டு சென்னை நகரில் அதிமுக ஐடிவிங்கின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசார் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்டி பரபரப்பைக் கிளப்பிய அதிமுக, தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த ஊழலுக்கு காரணமானவர் யார் என்ற கேள்வியை முன்வைத்து வித்தியாசமான போஸ்டரை அதிமுக ஐ.டி.விங்க் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளது.
அந்த தியாகி யார்? என்ற கேள்வியுடன் நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களிலும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்ததாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. பாஜக வெளிநடப்பு, அதிமுக ஆதரவு..!
குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000 கோடி டாஸ்மாக் ஊழல் - அந்த தியாகி யார்? எனக்குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் “பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் கொடுத்து, ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என்ற வாசகமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர்களை காவல்துறையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிழித்து வருவதாக அதிமுக நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அமலாக்கத்துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. அப்போது பெரிதாக ரியாக்ஷன் செய்யாத அதிமுக, நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய பிறகு போஸ்டர் ஒட்டியிருப்பது பாஜக தலைமையின் அட்வைஸாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது,
இதையும் படிங்க: அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!