கெத்துடா..! மரணத்தைக் கண்டு அஞ்சாத மாவீரர்..! தீவிரவாதிகளின் சவாலை ஏற்று நேரில் சென்ற மோடி..!
வாழ்க்கை மற்றும் மரணத்தின் நடனத்தில் மரணம் மட்டுமே நிச்சயமானது. அப்படியானால் நிச்சயமான ஒன்றை நினைத்து ஏன் பயப்பட வேண்டும்?
இந்தியாவுக்கு வந்த ஃபிரிட்மேன், பிரதமர் மோடியை சுமார் 3 மணி நேரமாக நேர்காணல் செய்தார். அப்போது இந்தியாவின் வரலாறு, அரசியல், உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பிரதமர் மோடி கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது, ஃபிரிட்மேன், பிரதமர் மோடியிடம், ''நீங்கள் உங்கள் மரணத்தைப்பற்றி யோசித்து இருக்கிறீர்களா? மரணத்தைப்பற்றி பயப்படுகிறீர்களா?'' எனக்கேட்டார். அதற்கு மோடி சொன்ன பதில் அளப்பரியது. ''லால் சவுக்கில் தீவிரவாதிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்கள். சுவர்களில் எழுதியுள்ளார்கள், 'தன் தாயின் பாலைக் குடித்த யாரேனும் முடிந்தால் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கிற்கு வந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி உயிடுடன் திரும்பிச் செல்லட்டும் என்று தீவிரவாதிகளே உங்கள் காதுகளை திறந்து கேளுங்கள்.
இதையும் படிங்க: ஆவலுடன் காத்திருக்கிறோம் சுனிதா.. பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நெகிழ்ச்சியாக கடிதம் எழுதிய மோடி..!
நாளை மறுநாள் ஜனவரி -26க்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளன. லால் சவுக்கிற்கு வருகிறேன். யார் தன் தாயின் பாலைக் குடித்தார் என்பது தெரிந்ததுவிடும்.நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? வாழ்க்கையும், மரணமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆனால் இவற்றில் எது நிச்சயமானது? மரணம்தான். இப்போது அதை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் பிறந்த மறுகணமே நம் மரணத்திற்கான கவுண்டவுன் தொடங்கி விடும் என்று நமக்கு தெரியும். ஆனால் வாழ்க்கை மேலோங்கி வளரவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
எனவே மீண்டும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் நடனத்தில் மரணம் மட்டுமே நிச்சயமானது. அப்படியானால் நிச்சயமான ஒன்றை நினைத்து ஏன் பயப்பட வேண்டும்? அதனால், நீங்கள் மரணத்தைப்பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மரணம் தவிர்க்க முடியாதது. அது வரும் நேரத்தைப்பற்றி கவலைப்படுவதில் பயன் எதுவும் இல்லை. அது வரவேண்டிய நேஎரத்தில் தானாகவே வரும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனை மோடி ஆதரவாளர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர். தீவிரவாதிகள் சவால்விட்ட பின் மோடி லால்சவுக்கு சென்று தீரத்துடன் கொடியேற்றிய வீடியோவையும் இணைத்து மோடியின் வீரதீர செயல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் பயங்கரவாதத் துரோகம்... ஆனாலும், அம்மக்கள் பாவம்..! கவலைப்படும் மோடி..!