தபால்காரருடன் சிரிச்சு சிரிச்சு கைகுலுக்கிய ஸ்டாலின்..! பங்கம் பண்ணும் பாஜக..!
ஒரு தபால்காரர் பதவிப்பிரமாணம் பிரமாணம் செய்து வைத்தது மிகப் பெரிய அங்கீகாரம்... கவர்னர் என்பவர் யார் எனத் தெரிகிறதா?
''அவர் வெறும் தபால்காரர் மட்டும்தான் என்று சொல்லிவிட்டு அந்த தபால்காரை தேடிச்சென்று சென்று பதவிப்பிரமாணம் ஏற்கும் ஒரே அரசு திமுகதான்'' என பலரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த மு.க.ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல், ஆளுநரின் அதிகார வரம்பு, மாநில அரசின் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம், அரசியல்-கருத்தியல் வேறுபாடுகள் போன்ற பல்வேறு விவகாரங்களை மையமாகக் கொண்டுள்ளது.
2021 செப்டம்பரில் ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் தொடங்கியது முதலே, திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் முட்டிக் கொண்டன.
இதையும் படிங்க: காங்கிரஸ் கிளப்பிய புது சர்ச்சை... கொந்தளிக்கும் பாஜக... பின்னணி என்ன?
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, திராவிடக் கொள்கைகள், சமூகநீதி, மாநில உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளுநர் ரவி, திராவிடக் கருத்தியலையும், மாநிலத்தின் பண்பாட்டு அடையாளங்களையும் எதிர்ப்பதாக ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள், குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாக்களுக்குஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்ததாக திமுக அரசு தொடர்ந்து ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகிறது.
2025 ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவியின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்ததை "சட்டவிரோதம்" என்று கண்டித்து, இது மாநில உரிமைகளுக்கு வெற்றியாக அமைந்ததாக ஸ்டாலின் வர்ணித்தார்.
2023 ஜனவரியில், ஆளுநர் ரவி, மாநில அரசு தயாரித்த பேரவை உரையில் இருந்து பெரியார், அம்பேத்கர், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களையும், "திராவிட மாடல்" என்ற குறிப்பையும் தவிர்த்து, அனுமதிக்கப்படாத உரையைச் சேர்த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், அரசு தயாரித்த உரையை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் கோபமடைந்த ரவி, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதை "குழந்தைத்தனமான செயல்" என ஸ்டாலின் விமர்சித்தார்.
2023 ஜனவரியில், ரவி, "தமிழ்நாடு" என்ற பெயருக்கு பதிலாக "தமிழகம்" என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது எனக் கூறினார். இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, ஏனென்றால் 'நாடு' என்ற சொல் மாநிலத்தின் தனித்தன்மையைக் குறிக்கிறது.
2025 ஜனவரியில், பேரவை அமர்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என ரவி வலியுறுத்தினார். மாநில அரசு, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபு என்று வாதிட்டது. இதனால் ரவி மீண்டும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
2024 அக்டோபரில், சென்னை தூர்தர்ஷனின் இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதை 'தமிழகத்திற்கு அவமதிப்பு' எனக் கூறி, ரவியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆளுநர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் தனக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். ஆனால், திமுக அரசு, இந்த அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு ரவி ஒப்புதல் அளிக்க மறுத்தார்.
2025 ஏப்ரலில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு ஆதரவாக அமைந்தது, இதனால் துணைவேந்தர்கள் ரவி அழைப்பு விடுத்த மாநாட்டை புறக்கணித்தனர். ரவி, இதை 'அவசரகால ஆட்சி' போன்று நடந்ததாக விமர்சித்தார் ரவி, தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் நீட் தேர்வை அமல்படுத்த வலியுறுத்தினார், ஆனால் திமுக அரசு இவற்றை எதிர்க்கிறது.
ஸ்டாலின், ஆளுநர் ரவியை "மத்திய அரசின் ஏஜெண்ட்" எனவும், "தமிழ்நாட்டின் பண்பாடு, மொழி, மற்றும் மக்களுக்கு எதிராக செயல்படுபவர்" எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ரவி 'மதவெறியைத் தூண்டுவதாகவும், மாநில அமைதிக்கு அச்சுறுத்தலாகவும்' இருப்பதாகக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார்.
ரவியின் செயல்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை மற்றும் கூட்டாட்சி கோட்பாடுகளை மீறுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றவை. முதலமைச்சர் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பவை" என பதிலடி கொடுத்தார். தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்பு குறைந்து, மாணவர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதாகவும், தமிழ் மொழியை பிற மாநிலங்களில் பரப்புவதற்கு தான் பங்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
2025 ஜனவரியில், மகாத்மா காந்தி நினைவு நிகழ்ச்சி நடத்திய இடம் குறித்து ரவி அரசை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ரவியின் எதிர்ப்பு திமுகவுக்கு அரசியல் ஆதரவைப் பெற்றுத்தருவதாகக் கூறினார். 2025 ஏப்ரலில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ஸ்டாலின் மாநில உரிமைகளை வலுப்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் துணைவேந்தர் மாநாடு புறக்கணிப்புக்குப் பிறகு, நேற்று மனோதங்கராஜ் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் ஸ்டாலினும், ரவியும் முதல் முறையாக நேரில் சந்தித்து பரஸ்பர நட்பை விசாரித்தனர். ஆனாலும், மோதல் தீர்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை. முன்பு மு.க.ஸ்டாலின், ளுநர் ரவியை தபால்காரர் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், பாஜகவினர், ''உங்களுக்குத்தான் எல்லா பவரும் வந்துருச்சே. நீங்கள் ஏன் போஸ்ட் மேன் வீட்டுக்கு போனீர்கள்? நீங்களே பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டியது தானே'' என மு.க.ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.
''சுயமரியாதை என்பது என்னவென்றால், ஆளுனரை தபால்காரர் என்று சொல்லிவிட்டு அமைச்சர்களை நீக்கவும் சேர்க்கவும் அவரிடமே போய் கையேந்தி நிற்பது. அதுவும் ஒரு தபால்காரர் பதவிப்பிரமாணம் பிரமாணம் செய்து வைத்தது மிகப் பெரிய அங்கீகாரம்... கவர்னர் என்பவர் யார் எனத் தெரிகிறதா?'' என பலரும் மு.க.ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வந்த 5 லட்சம் பாக். பெண்கள்.. பாஜக எம்.பி. வெளியிட்ட திடுக் தகவல்.!