கையெழுத்து இயக்கம்... தமிழிசை சவுந்தரராஜன் வலுக்கட்டாயமாக கைது...!
கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார் தமிழிசையை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டிருக்கிறார் தமிழிசையை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று அந்த இயக்கத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார், தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்படவிருந்தது.
சென்னை கேகே நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ் சௌந்தரராஜன் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க வைத்திருந்தார். 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த இடத்தில் திரண்டு இருந்தார்கள். ஆனால் காவல்துறை சார்பில் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அதனால் கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தமிழிசை சவுந்தரராஜன், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை, இது அமைதியான முறையில் நடத்தக்கூடிய கையெழுத்து இயக்கம் என்றும், இதனால் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் வராது என்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: திருமா இன்னைக்கே ஆரம்பிச்சிட்டாரே...! திமுகவில் தெருக்கோடி பிரச்சனை... விளாசியத் தள்ளிய தமிழிசை...!
இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தமிழிசை சவுந்தராஜனையும் போலீஸ் வாகனத்தில் ஏறும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்ததோடு “நான் என்ன தீவிரவாதியா?” என வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். தொடர்ந்து பெண் போலீசார் தமிழிசை சவுந்தர் ராஜனை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீசாரைக் கண்டித்தும் ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ என அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே திமுக அரசு எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்த திட்டமிட்ட பாஜகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆதரவு தந்த பொன்னார், பி.எல் சந்தோஷ்..! வாய் திறக்காத தமிழிசை.. புகையும் பாஜக பூசல்!