×
 

திமுகவுக்கு துப்பில்ல... காங்கிரஸுக்கு வெட்கமில்ல... வெளுத்து வாங்கிய தமிழிசை...! 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், மரியாதைக்குரிய தர்மேந்திர பிரதான் சொன்னதுக்கு மனம் வருந்தி யாராவது புண்பட்டு இருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார். உடனே முதலமைச்சர் என்ன கூறுகிறார். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக எம்பிக்களின் வெற்றியாம். போர் குணம் கொண்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்களா? இல்லையே, இதே டிஆர் பாலு, மத்திய அமைச்சர் எல்.முருகனைப் பார்த்து என்ன சொன்னாரு. நீங்க அமைச்சரா இருக்குறதுக்கு தகுதியற்றவர் என்று சொன்னார் இதெல்லாம் நல்ல வார்த்தைகளா? அவர்களும் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் தானே. 

இன்னைக்கு நாவடக்கம் தேவை என்று சொல்கிறார்கள். இப்ப நாக்கை அறுத்துவோம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று நான் கேட்கிறேன். மத்திய அமைச்சர் தான் உணர்ந்து கொண்டு, மன்னிப்பு கேட்கிறார், வார்த்தையை திரும்ப பெறுகிறேன் என்று சொல்விட்டார். இந்த எம்பிக்கள் கூச்சலிடுவதற்கு தான் சரியானவர்கள் இன்று நீங்க மற்ற மாநிலத்திற்கு போறீங்க இன்னைக்கு தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனை நடக்குது பாருங்க.

இதையும் படிங்க: கையெழுத்து இயக்கம்... தமிழிசை சவுந்தரராஜன் வலுக்கட்டாயமாக கைது...!

இன்னைக்கு ஒரு பள்ளிக்கரணையில ஒரு குட்டையில ஒரு குழந்தை விழுந்திருக்கு அதே மாதிரி பேனர் விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.  தூத்துக்குடியில் பார்த்தீங்கன்னா தலித் மாணவர்கள் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இன்னைக்கு கோயம்புத்தூருக்கு அருகே அவிநாசியில் மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே அதே பகுதியில் அம்மா அப்பா ஒரு மகன் கொலைப்பட்டதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. 

காங்கிரஸ்காரர்களுக்கு ஏன் வெட்கமே இல்லை, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தலைவர் கொலையுண்டார் இன்னைக்கு வரைக்கும் கண்டுபிடிக்கல ஆகஅப்படித்தான் தமிழகத்தில் இருக்கிற சட்ட ஒழுங்கு இதை வைத்துக்கொண்டு இவர்கள் பேசுகிறார்கள். மொழியை வைத்து, தொகுதி மறைவரையை வைத்து தமிழகத்தில் உள்ள அவ்வளவு குற்றங்களையும் மறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். 
 

இதையும் படிங்க: திருமா இன்னைக்கே ஆரம்பிச்சிட்டாரே...! திமுகவில் தெருக்கோடி பிரச்சனை... விளாசியத் தள்ளிய தமிழிசை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share