×
 

பிரதமருக்கு வெண்குடை பிடித்த நீங்கள் காவிச்சட்டை பற்றி பேசலாமா..? ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் சம்மட்டி அடி..!

ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் தமிழ்நாடு வரும் போது கருப்பு பலூன் பறக்கவிட்டார். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற போது வெண்குடை பிடித்து வரவேற்கிறார்.

பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். சட்டப்பேரவைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்தனர். 

தொடர்ந்து மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நல்லவேளை அதிமுகவினர் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்துள்ளார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஒரு நீதி,எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? என அதிமுகவினர் முழக்கம் எழுப்பியபடியே அவையில் இருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக மலரவே மலராது... பாஜகவுக்கு நாஞ்சில் சம்பத் சாபம்.!!

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அதிமுகவினர் இன்று கருப்பு சட்டையில் வந்துள்ளனர். காவி உடையில் வராமல் கருப்பு உடையில் வந்திருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணரவேண்டும். தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அந்த தகுதி இல்லாத முதலமைச்சர் தான் இன்றைய முதலமைச்சர்.

நாங்கள் உள்ளே இருக்கும் போதே நீங்கள் பேசியிருக்க வேண்டும். எங்களை வெளியே அனுப்பிவிட்டு முதலமைச்சர் பதில் கூறிக்கொண்டு இருக்கிறார். எங்களுக்கு பேச வாய்ப்பளித்து பேசியிருந்தால் அவையில் தக்க பதிலடி கொடுத்திருப்போம். அந்த திராணி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.

ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது பிரதமர் தமிழ்நாடு வரும் போது கருப்பு பலூன் பறக்கவிட்டார். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கின்ற போது வெண்குடை பிடித்து வரவேற்கிறார். இப்போதைய முதல்வர் வெண்குடை வேந்தராக இருக்கிறார். வீரத்தை பற்றி நீங்கள் பேசலாமா? ஒரு கட்சி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். ஆனால் திமுக அப்படி நடந்து கொள்ளாது.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைக்கட்சிகளாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கே இருக்கின்றன. திமுக தனது கூட்டணிக்கட்சிகளை வளரவிடாது.

திமுகவோடு கூட்டணி சேரும் கட்சிகள் எல்லாம் காற்றோடு காற்றாக கரைந்து விடும் எனவே அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவையின் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் முதலில் பேச வாய்ப்பு தர வேண்டும். ஆனால், திமுக கூட்டணி கட்சியினருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: கலைச்சிவிட்டியே கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை அப்புல தூக்கி டப்புன்னு கீழ போட்ட காங்கிரஸ் எம்.பி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share