×
 

அடுப்பு எரியனுமா? வயிறு எரியனுமா? Sadist BJP அரசே... சரமாரியாக விளாசிய மு.க.ஸ்டாலின்!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளது.

மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், 818 ரூபாய் 50 காசாக இருந்த இருந்த சிலிண்டர் விலை 868 ரூபாய் 50 காசாக உயரும். இந்த விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிலிண்டர் விலையில் கை வைத்த மத்திய அரசு... அதிர்ச்சியில் மக்கள்!!

இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும்! உலக அளவில் Crude Oil விலை சரிந்துள்ள நிலையில், Petrol Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே... அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! மத்திய BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக! என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிலிண்டர் விலையில் கை வைத்த மத்திய அரசு... அதிர்ச்சியில் மக்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share