வேலியே பயிரை மேய்ப்பது போல.. நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோவில் கைது..!
திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சற்று அதிகரித்தே வருகின்றன என்றே சொல்லலாம். தற்போது திருச்சி மருத்துவமனையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது மாவட்டம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் இளம் ராஜா என்பவர் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குற்றவாளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரித்திகை வாசன் என்ற சிறை கைதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கைதி பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கைதிக்கு பாதுகாப்பாக போலீஸ்காரர் இளம் ராஜா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது..
இந்த நிலையில் தான் சிறை கைதிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வாடிற்கு முதலாம் ஆண்டு நர்சிங் பயிற்சி மாணவி ஒருவர் கைதி பிரித்திகை வாசனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது கைது பிரித்திகை வாசனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் இளம்ராஜா நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது பற்றி மருத்துவமனையை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவ நிறுவனம் மருத்துவமனை நிர்வாகம் அளித்த அறிவுரையின்படி மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காவலர் இளம் ராஜா நர்சிங் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது போக்ச சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்ட எஸ் பி அவரை பணியிடம் நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய மூர்க்க மத போதகர்.. கேரளா போலீஸ் கொடுத்த துப்பு.. கோவையில் குடும்பத்துடன் சிக்கிய மத போதகர்..!