சிறுமியை கர்ப்பமாக்கிய மூர்க்க மத போதகர்.. கேரளா போலீஸ் கொடுத்த துப்பு.. கோவையில் குடும்பத்துடன் சிக்கிய மத போதகர்..!
நாகர்கோவில் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மத போதகர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்தி விலையைச் சேர்ந்தவர் ஜான் ரோஸ். இவர் பெருஞ்சிலம்பு கரும்பாலை பகுதியில் உள்ள ஜெபக்கூடம் ஒன்றே நடத்தி வருகிறார். இந்த ஜெப கூடத்தில் அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் ஜெபம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஏராளமானோர் இப்பகுதிக்கு சென்று அங்கு ஜபம் செய்து பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தி மக்களுக்கு போதித்து பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 13 வயது மகள் ஜெப கூடத்தில் நடக்கும் பிரார்த்தனைகளில் பங்கேற்றுள்ளார். இது மட்டும் இன்றி அவ்வப்போது மத போதவரின் வீட்டில் சிறுமி சிறு சிறு வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். அப்போது கட நாட்கள் செல்லவே சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் முற்றத்தாய் அவரையும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும், அவர் பலாத்காரம் செய்யப்பட்ட தற்போது கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஏழு அரக்கர்கள்.. 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது போதகர் ஜான் ரோஸ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் ஜான் ரோஸ் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஜான் ரோசிடம் கேட்கவே அவர்களை மிரட்டி, கேரள மாநிலம் கொல்லத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் அளித்த தகவலின் படி அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அறிந்த ஜான் ரோஸ் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து விசாரணை தீவிர படுத்திய போலீசார் கேரள மாநில போலீஸா இருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி கேரள போலீசார் அளித்த தகவலின் படி மார்த்தாண்டம் மகளிர் போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ஜான் ரோஸ் மற்றும் அவரது மனைவி ஜலின் பிரபா மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நிர்வாண படத்தைக் காட்டி மிரட்டி, இன்ஜினியரிங் மாணவி கூட்டு பலாத்காரம்; 2 மாதங்களாக நீடித்த கொடூரம்; காதலன், நண்பர்களுடன் கைது