டெல்லி முதல்வரின் பதவியேற்பு விழா… தலைநகரில் பாஜகவின் அசத்தல் ஏற்பாடு... எதிரிகளுக்கும் அழைப்பு..!
இந்த பதவியேற்பு விழாவை இன்னும் பிரமாண்டமாக நடத்துவதில் பாஜக மும்முரமாக உள்ளது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்களில் 48 இடங்களை வென்ற பிறகு பாரதிய ஜனதா கட்சி அரசை அமைக்கப் போகிறது. புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பார். இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவை இன்னும் பிரமாண்டமாக நடத்துவதில் பாஜக மும்முரமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல விஐபிகள் இதில் பங்கேற்க உள்ளனர். பாஜகவின் விருந்தினர் பட்டியலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் அதிஷி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பா.ஜ.க. முதல்வர்? முன்னாள் நடிகர் மனோஜ் திவாரி பெயரும் அடிபடுகிறது
பாஜகவின் வெற்றிக்குப் பிறகு, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. முத்ல்வர் பட்டியலில் பர்வேஷ் வர்மாவின் பெயர் முன்னணியில் இருகிறது. அவர் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தார். பாஜக எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா, விஜேந்திர குப்தா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. பிப்ரவரி 19 அன்று பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் இதே தலைவர்கள் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து அரசை அமைக்க உரிமை கோருவார்கள்.
டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்த பிற மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், தொண்டர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். லாட்லி பெஹ்னா யோஜனாவின் பயனாளிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக ராம்லீலா மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பாடகர் கைலாஷ் கெர் நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ராம்லீலா மைதானத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு ஒரு பெரிய பந்தல் கட்டப்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவிற்காக மூன்று தனித்தனி மேடைகள் தயாராகி வருகின்றன. ஒரு மேடை 40 x 24 மீட்டர் அளவிலும், இரண்டாவது மேடை 34 x 40 மீட்டர் அளவிலும் இருக்கும். மூன்று மேடையில் சுமார் 150 நாற்காலிகள் வைக்கப்படும். பிரதமர், துணைநிலை ஆளுநர், புதிய முதலமைச்சர், அமைச்சரவையின் பிற உறுப்பினர்கள் ஒரு பெரிய மேடையில் இருப்பார்கள்.
பாஜகவின் மூத்த தலைவர்களும், பிற மாநிலங்களின் முதலமைச்சர்களும் மறு மேடையில் அமர்ந்திருப்பார்கள்.சிறப்பு விருந்தினர்கள், துறவிகளுக்கு ஒரு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள், சோபாக்கள் தரையில் நிரப்பப்பட்டுள்ளன. மைதானம் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடும் போட்டி.. பாஜகவின் புதிய முதலமைச்சர் யார்??? வெளியாகப் போகும் புதிய பெயர்..