சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் திமுக அரசு ..கடம்பூர் செ.ராஜூ தாக்கு ..!
திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதே போன்று அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது
திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு செய்யப்படவில்லை. பல மணிமண்டபங்களில் பணியாளர்கள் இல்லாத நிலை தான் உள்ளது. அதேபோன்று பல மணிமண்டபங்களில் நூலகங்களும் அமைக்கப்படவில்லை இது நாட்டை அவமானப்படுத்தப்படும் செயல், தலைவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் கௌரவம் இதுதான் என்று குற்றம்சாட்டினார்.
வாழுகின்ற மக்களையே ஒழுங்காக வாழ வைக்கவில்லை , வாழ்ந்து மறைந்த தலைவர்களே இவர்கள் இப்படித்தான் நடத்துவார்கள் என்பதற்கு இந்த ஆட்சி ஒர் உதாரணமாக உள்ளது.என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!
இதையும் படிங்க: இடிந்தும் விழும் நிலையில் வீடு .. ஆட்டோவில் வாழ்க்கை நடத்தும் அவலநிலை ..கதறும் மாற்றுத்திறனாளி..!