×
 

புயலாய் புறப்பட்ட 'இளந்தென்றல்'... மன்னராட்சிக்கு மகுடம் சூட அழைக்கும் உடன் பிறப்புகள்..! 'உதித்தது' இன்பநிதி மன்றம்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அப்பா உதயநிதியும், மகன் இன்பநிதியும் தான் ஃபுல் அட்ராக்சனாக இருந்தார்கள், தற்போது அதை வைத்து திமுக உடன்பிறப்புகள் வேறு அலப்பறை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அப்பா உதயநிதியும், மகன் இன்பநிதியும் தான் ஃபுல் அட்ராக்சகனாக இருந்தார்கள் என்றால், அதை வைத்து தற்போது திமுக உடன்பிறப்புகள் வேறு அலப்பறை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

ஜல்லிக்கட்டு அலப்பறைகள்:

பொங்கல் பண்டிகை என்றாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் ட்ரெண்டாகும், ஆனால் இந்த முறை ட்ரெண்டானது என்னவோ, துணை முதலமைச்சர் உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும் தான். காணும் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும்...

உதயநிதி வந்தபோது தனது மகன் இன்பநிதியை உடன் அழைத்து வந்தார். இன்பநிதியைப் பார்த்து அமைச்சர்கள், அதிகாரிகள் அளவுக்கு அதிகமாகவே பம்மினார்கள். குறிப்பாக மூத்த அமைச்சரான மூர்த்தி, துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பொன்னாடை போர்த்தியதோடு, அவரது மகனும், முதல்வரின் பேரனுமான இன்பநிதிக்கும் சால்வை அணிவித்தார். 

ஜல்லிக்கட்டு மேடையில் தங்க தமிழ் செல்வனில் ஆரம்பித்து பிடிஆர், மூர்த்தி, இன்பநிதி, உதயநிதி, ஆட்சியர் சங்கீதா அடுத்து இரண்டு எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர். இன்ப நிதியுடன் வந்த 2 நண்பர்கள் பின்னால் நின்றிருந்தனர். சிறிது நேரம் கழித்து தன் தந்தையிடம் நண்பர்கள் பற்றி சொன்னார் இன்பநிதி. இதையடுத்து அமைச்சர் மூர்த்திக்கு பக்கத்தில் அவர்களை அமர்த்த இன்பநிதி முயன்றார். போட்டியை பல முன்னணி மூத்த கட்சியினர் நின்றுக்கொண்டு பார்த்தனர். அதில் ஜல்லிக்கட்டு ராஜசேகரனும் ஒருவர். 

இதுதொடர்பான புகைப்படங்கள் காட்டுத் தீ போல் சோசியல் மீடியாக்களில் பரவ ஆரம்பித்தன. சோசியல் மீடியாக்களில் திமுகவினரின் இந்த செயலை மன்னராட்சி என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் விதவிதமான மீம்ஸ்களும் தூள் பறந்தன.

அதிமுக, பாஜக அட்டாக்:  

விட்டால் இன்பநிதி காலிலேயே அமைச்சர் மூர்த்தி விழுந்திருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ  “உதயநிதிக்கும், அமைச்சருக்கும் இடையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் இன்பநிதி அமர்ந்திருந்தார். அந்த இருக்கையை விட்டுக்கொடுத்ததே மாபெரும தவறு. ஆட்சியரின் இருக்கையில் இன்பநிதி அமர்ந்துள்ளார். ஆட்சியர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார்” என தனது ஐபிஎஸ் மூளையைக் கசக்கிப் பிழித்து கண்டனம் தெரிவித்தார். 

இதுமட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் திமுகவிற்கு எதிரானவர்கள் கண்டன குரல் எழுப்ப, வந்தவர்களை எல்லாம் “யாருகிட்ட”என்பது போல் திமுக உடன்பிறப்புகள் ரவுண்ட் கட்டி சமாளித்து வந்தனர். கொத்தடிமைகள், மன்னராட்சி என்றெல்லாம் சகட்டு மேனிக்கு விமர்சனம் வீசப்பட்ட போதும், கடுகளவு கலக்கம் காட்டாமல் சமாளித்தனர். தற்போது எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக தரமான சம்பவத்தை செய்துள்ளனர். 

இன்பநிதி மன்றம்: 

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வழியில் தற்போது இன்பநிதிக்கும் கட்சியில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளனர் திமுக உடன்பிறப்புகள். தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் “இளந்தென்றல் இன்பநிதி நற்பணி மன்றம்” என்ற பெயரில் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பொன்னான காரியத்தை திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் செய்ததோடு, ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். 

ஓஹோ... இப்போ நற்பணி மன்றம், நாளை பாசறை, அப்புறம் இளைஞர் அணித் செயலாளர்... துணை முதல்வர், முதல்வர் என அந்த ரூட்டில் வருகிறீர்களா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மற்றொருபுறம் முதலமைச்சரின் பேரன், துணை முதலமைச்சரின் மகன் என்பதற்காக இப்படியெல்லாம் அலப்பறை செய்வதா? உங்களோட மன்னராட்சிக்கு ஒரு முடிவே இல்லையா? என எதிர்க்கட்சி ஐ.டி. விங்குகள் பொளக்க ஆரம்பித்துள்ளன. 

இதற்கு முன்பு இதேபோல் 2023ம் ஆண்டு புதுக்கோட்டையில் இன்பநிதி பாசாறை என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.  அவர்களை கூண்டோடு கட்சியில் விட்டு தற்காலிகமாக நீக்குவதாக அடுத்த நாளே திமுக தலைமை அறிவித்தது. இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்...

 

இதையும் படிங்க: 'ஆடி வராரு கருப்பு ஓடி வராரு...' பக்தியில் காது கடித்த துர்க்கா ஸ்டாலின்… கடுப்பில் பல்லைக் கடித்த ஆ.ராசா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share