என்னையும் அந்தச் சாக்கடையில் தள்ளாதீர்கள்… எனக்கு சொந்தமாக மூளை உள்ளது.. சீமான் ஆவேசம்..!
என் கால்களை நம்பித்தான் என் பயணம். பா.ஜ.க.வுடன் நாதக கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள்?
தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தவெக, திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர் கட்சிதான்.
இன்னொரு முக்கிய முடிவு நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8-10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும்.
''தற்காலிகமான தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன் என சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என்னையும் கொண்டு போய் அந்த சாக்கடையில் தள்ளுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். திரும்ப்பத் திரும்ப பாஜகவுடன் கூட்டணி என்பதை நான் வெறுக்கவில்லை. அருவெருக்கிறேன். கதற்காலிக வெற்றிக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. என் கால்களை நம்பித்தான் என் பயணம். அடுத்தவர் தோள்களை நம்பி நாங்கள் பயணிக்கவில்லை.
பா.ஜ.க.வுடன் நாதக கூட்டணி என ஏன் என்னை பிடித்து தள்ளுகிறீர்கள்?. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றலும் உள்ளது. நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்பதை திரும்பத் திரும்ப கூறி வருகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் .
இதையும் படிங்க: இந்தக் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி… அறிவித்தார் நாதக சீமான்..!