2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர்..! அடிச்சு சொல்லும் ஆர்.பி.உதயகுமார்..!
அமித்ஷா- எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் சந்திப்பு திமுக அமைச்சர்களுக்கு காய்ச்சல் ஏற்படுத்தி விட்டது என்று ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
டெல்லிக்குச் சென்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பானது அதிமுக பாஜக இடையிலான கூட்டணி தொடர்பானது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் இதுவரை அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும் பாஜக அதிமுக கூட்டணி தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா இடையிலான சந்திப்பு பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
இது தொடர்பாக மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேசினார். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு விட்டது என்றும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது, போதைப் பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அரசின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகிறது என்றும் இதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கடமை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...
சட்டசபையில் கேள்வி நேரத்தின் ஜீரோ ஹவரில் தான் கேள்வி எழுப்பியதாகவும் சபாநாயகரும் அதற்கு அனுமதி கொடுத்ததாகவும் ஆனால் நாங்கள் முறையாக கேள்வி கேட்கவில்லை என்று முதலமைச்சர் பதில் சொல்லாமல் விட்டதாகவும் தெரிவித்தார். இது மக்களின் கேள்வி என்றும் முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால் உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அதிமுக இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து தங்களை வெளியே தூக்கி போட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஜனநாயகம் எங்கே போய்விட்டது என்று கேள்வி எழுப்பிய ஆர்பி உதயகுமார், சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
உதயநிதி அழகாக பேசுகிறார் சிறப்பாக பேசுகிறார் என்று ஜால்ரா போடுவதற்காக மக்கள் தங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் குற்றம் குறைகளை சுட்டிக் காட்டும் ஆண் மகனாக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால் டெல்லியில் மத்திய அமைச்சர் அமைச்சவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தவுடன் திமுக அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது என்றும் விமர்சித்தார்.
திமுக பட்ஜெட்டை எல் இ டி திரையில் ஒளிபரப்பினார்கள்., ஆனால், பார்க்க தான் ஆள் இல்லை என்றும் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது, மின் கட்டணம் உயர்ந்து விட்டது, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆர்பி.உதயகுமார்., இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டுமென்றால் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும் என்றும் 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026ல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்..! எலான் மஸ்க் நம்பிக்கை..!