×
 

இதிலும் ஸ்டிக்கர் அரசியலா?... அம்மா மருந்தகங்களுக்கு நேர்ந்த பரிதாபம்... கொதித்தெழுந்த விஜயபாஸ்கர்...! 

அம்மா என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் திமுக அரசு வேறு பெயரை வைத்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார். 

அம்மா என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் திமுக அரசு வேறு பெயரை வைத்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டியுள்ளார். 

ஏழை எளிய நோயாளிகளுக்கு தனியார் மருந்தகங்களில் இருப்பதை விட குறைவான விலைக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால், தமிழ்நாடு அரசு சார்பி அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அது இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதன் பெயர் அம்மா மருந்தகம் என இருப்பதாலேயே, இடையில் அதனை  திமுக அரசு, கண்டுகொள்ளாமல் விட்டது. 

அம்மா மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட்டதை மறைத்து, இன்று முதல்வர் மருத்தகத்தை தொடங்கியுள்ளனர். இது ஏற்புடையது அல்ல என்றும், அம்மா மருந்தகத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை என்றும் விஜயபாஸ்கர் சாடினார். திமுக அரசு அம்மா என்ற பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்ட முயல்வதாக தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்களை நாங்கள் சிறப்பாக நடத்துகிறோம் என்றார். ஆனால் சட்டப்பேரவையில் அம்மா உணவகம் குறித்து பேசியதோடு சரி, எங்கும் அதனை விரிவுபடுத்தவோ, ஊக்கப்படுத்தவோ இல்லை என சகட்டுமேனிக்கு சாடினார். 

இதையும் படிங்க: அக்கறை இல்லை... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!

அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகம் பெயரை மாத்திட்டாங்க, அம்மா ஆரோக்கிய திட்டம் அதுலையும் பெயரை மாத்திட்டாங்க, அதுமட்டுமின்றி அம்மா குடிநீர் திட்டம் அதுலையும் அம்மா என்பதை எடுத்துவிட்டார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அம்மா மாஸ்டர் ஹெல்த் செக்கப் என்பது இருந்தது. இப்போது மாஸ்டர் ஹெல்த் செக்கப் இருக்கிறது, ஆனால் அம்மா என்ற வார்த்தை இல்லை. 

அம்மா தொடங்கிய திட்டங்களை எல்லாம் நாங்கள் தடுக்கவில்லை, மறைக்கவில்லை, தொடர்ந்து நடத்துகிறோம் எனக்கூறும் திமுக அரசு, அதை உண்மையாக இருக்கும் என்றால், அம்மா பெயரால் தொடங்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்து அவரது பெயரிலேயே நடத்த வேண்டும் என்றார். 

இதையும் படிங்க: 10,000 கோடி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்... மத்திய அரசை நேரடியாக எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share