விமான நிலையங்களில் கட்டணக் கொள்ளை: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விளாசல்
நாடுமுழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமானநிலைய பராமரிப்பாளர்களால் பயனர் மேம்பாட்டுக் கட்டணம்(யுடிஎப்) என்ற பெயரில் கட்டணங்கள் தன்னிச்சையாக எவ்வாறு வசூலிக்கப்படலாம் என நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)
எந்த அடிப்படையில் பயணிகளிடம் இருந்து கட்டணங்களை வசூலிக்கிறீர்கள், எந்த அடிப்படையில் கட்டணத்தை கணக்கீடு செய்கிறீர்கள், இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், இந்த கட்டணத்தால் செய்யப்பட்ட பணிகள், பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் விமான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வரிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மெத்தனமாக செயல்பட்டுள்ளது என நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் தலைமையில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூடுவது இது முதல்முறையாகும். இந்தக் கூட்டத்தில் விமான நிலையங்களில் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் வரி, கட்டண விதிமுறை, கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. விமானப் பயணிகள் மீது பயனர் மேம்பாட்டுக் கட்டணம் என விமான டிக்கெட் கட்டணம் தவிர்த்து விதிக்கப்படுகிறது. விமானநிறுவனம் சார்பில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, விமானநிலைய பராமரிப்பாளரிடம் தரப்படும். நாட்டின் பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் விமானநிலையங்களில் இதுபோன்ற பயனர் மேம்பாட்டுக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த யுடிஎப் கட்டணம் எந்த அடிப்படையில் விமானப் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த விமான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளி்க்க நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு கோரியுள்ளது. இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்த 15 நாட்களுக்குள் யுடிஎப் மூலம் கிடைத்த வருவாய், அதை எவ்வாறு செலவிட்டீர்கள், பயணிகளுக்கு செய்து கொடுத்த அடிப்படை வசதிகள், எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது ஆகியவை குறித்து விரிவாக எழுத்துப்பூர்வமாக விமான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஒரு அரசியல் தலைவர் நழுவக்கூடாது… அந்த இடத்தைக் காட்டுங்க பார்க்கலாம்...' விஜய்க்கு அண்ணாமலை கிடுக்குப்பிடி..!
கடந்த ஜூன் மாதம் அதானி நிறுவனம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் யுடிஎப் கட்டண் திடீரென 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம் ரூ.560லிருந்து ரூ.770 ஆக வசூலிக்கப்பட்டது. விமானத்திலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டணமாக ரூ.330 முதல்முறையாக வசூலிக்கப்பட்டது, லேண்டிங் சார்ஜ் என்று விமானத்துக்கு தனியாக வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணக் கொள்ளை தொடர்பாக கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பரந்தூர் விசிட்... முதல் போராட்டக் களத்தில் விஜய்..