இதுதான் திராவிட மாடல்... திமுக இளைஞரணி கூட்டத்தில் கும்மாளம்... ‘பீர்’ பாட்டிலுடன் பிரியாணி விருந்து..!
திமுகவினர் 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் கூடிய பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. சாப்பாட்டு மேஜையின் மீது ஒரு இலைக்கு ஒரு பீர் பாட்டில் வைக்கப்பட்டது.
போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது… போதைக்கு அடிமையாகக் கூடாது…’ என தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து, புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: வெளியேற்றப்பட்ட செந்தில் பாலாஜி- பொன்முடி... அமைச்சரவையின் கதவருகே துரைமுருகன் - கே.என்.நேரு..?
கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்னர் திமுகவினர் 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் கூடிய பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. சாப்பாட்டு மேஜையின் மீது ஒரு இலைக்கு ஒரு பீர் பாட்டில் வைக்கப்பட்டது.தண்ணீர் பாட்டிலுக்கு பதில் பீர் பாட்டில்களே மேஜையில் அதிகம் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து உற்சாகமடைந்த உடன் பிறப்புகள், காணாத பொக்கிஷத்தைக் கண்டதைப்போல ஆர்வமாக போட்டோ,வீடியோ எடுத்துக் கொண்டனர். இந்தக் காட்சிகள்சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுக்கெல்லாம் இளம் விதவைகள் அதிகமாக மாட்டாங்களா @KanimozhiDMK
— Arulkumar Karuppannan (@ArulkumarBjp) April 28, 2025
ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதி இளைஞரணி(ம)து அமைப்பாளர்களுக்கு வெயிலுக்கு இதமாக கூலிங் பீர் மற்றும் கறிவிருந்து வழங்கிய திமுக MLA வசந்தம் K.கார்த்திகேயன் அவர்கள்... pic.twitter.com/0WzIxYcumB
மதுவை ஒழிப்பதாக பேசும் விளம்பர அரசு, திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் எதிரொலி..! இன்று கூடுகிறது நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்..!