×
 

6ஆம் வகுப்பு மாணவியிடம் அட்டகாசம் செய்த தமிழாசிரியர்.. பாடம் புகட்டிய போலீசார்..

அரியலூரில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீரும் செயல்களில் ஈடுபட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாடப்படிக்க சொல்லும் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு இவ்வாறு மோசமான சூழலை உருவாக்குவது சமூக சீர்கேடு என்பதை கடந்து தனிமனித மூர்க்கத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது அரியலூரில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தமிழ் ஆசிரியர் சுரேஷ் என்பவர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்துள்ளார். இது மட்டும் இன்றி மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி இது சம்பந்தமாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ப்பது போல.. நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோவில் கைது..!

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழ் ஆசிரியர் சுரேஷின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது பள்ளியில் இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் சுரேஷ் சிறுமியிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டது உறுதியானது. இதனை அடுத்து ஆசிரியர் சுரேஷை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது.. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share