இந்தியில் படிக்க விரும்பினால் உங்களுக்கு ஏன் கசக்கிறது..? லிங்கை அனுப்பி ஸ்டாலினுக்கு பாடம் எடுத்த பட்னாவிஸ்..!
நீங்கள் ஏன் பன்மொழி பேசத் தயாராக இல்லை? யாராவது இந்தியில் படிக்க விரும்பினால் உங்களுக்கு ஏன் சிக்கல் உள்ளது?
''ஸ்டாலின், அவர்களே... மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து விளக்கங்களைப் பெறுவதற்கு முன், தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்குத் தேவை'' என மாஹாராஷ்டிரா முதல்வர், மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமளித்துள்ளார்.
''மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று இப்போது கூறுகிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் மிகுந்த அச்சமடைந்துள்ளதை இது தெளிவாகக் காட்டுகிறது.
மாண்புமிகு பிரதமரும் மத்திய கல்வி அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்:
தேசிய கல்விக் கொள்கையின் (#NEP) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ‘இந்தி மொழி’யை திணித்தால் போராட்டம் வெடிக்கும்.. ராஜ் தாக்ரே எச்சரிக்கை..!
அப்படியானால், புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா? மத்திய அரசு ரூ.5000/-ஐ விடுவிக்குமா? கட்டாய மூன்றாம் மொழி கற்பித்தலுக்கு மாநிலம் குழுசேர வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு 2,152 கோடி ரூபாயை அநியாயமாக நிறுத்தி வைத்ததா?'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது எக்ஸ்தளப்பதிவில், ''ஸ்டாலின், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து விளக்கங்களைப் பெறுவதற்கு முன், தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்குத் தேவை. முதலில் நீங்கள் தேசிய கல்விக் கொள்கை என்றால் என்ன என்பதைப் படிக்க வேண்டும்! உங்கள் குறிப்புக்கான இணைப்பு இங்கே - https://education.gov.in/national-education-policy
தேசிய கல்விக் கொள்கை ஒருபோதும் மொழித் தேர்வை வலியுறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை. ஆனால் 3 இந்திய மொழிகளில் ஆங்கிலத்தைத் தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் அல்லது மாணவர்கள் விரும்பும் எந்த மொழியையும் மூன்றாம் மொழியாகப் படிக்க நாங்கள் திறந்திருக்கிறோம்.
முக்கிய கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏன் பன்மொழி பேசத் தயாராக இல்லை? யாராவது இந்தியில் படிக்க விரும்பினால் உங்களுக்கு ஏன் சிக்கல் உள்ளது?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம்..! அரசின் முடிவால் மராத்திய மக்கள் அதிர்ச்சி..!