×
 

அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

விஜய் அதிமுகவுக்கு கிடைக்காத காரணத்தினால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது என 'துக்ளக்' ஆசிரியர்ன்ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதில் 'துக்ளக்' ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி முக்கிய பங்காற்றினார். அண்மையில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்பு ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் அமித்ஷா சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதேபோல அண்ணாமலையும் குருமூர்த்தியைச் சந்தித்து பேசினார். இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததன் பின்னணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு  குருமூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.



"சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் கூட்டணியை முடிவு செய்தது அமித்ஷாவின் திறமைதான். கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், இந்தக் காலகட்டத்தில் கட்சியைத் தேர்தலுக்குத் தயார் செய்யப்பட்டு இருக்கும். தேர்தலில் தனியாக போட்டியிட்டால் ஓட்டு சதவீதம் 12% இருந்து 24%  அதிகரித்திருக்கும். ஆனால், தேர்தலில் தோல்விதான் கிடைக்கும். ஆனால், கட்சி வளரும். தற்போதைய சூழலில் கட்சியை வளர்ப்பதா அல்லது திமுகவை தோற்கடிப்பதா? இதுதான் பாஜகவிற்கு உள்ள சாய்ஸாக இருந்தது. அதே நேரத்தில் அதிமுக முன் உள்ள சாய்ஸ் என்பது யாருடன் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என்பது.


அதிமுகவுக்கு விஜய் கிடைக்கவில்லை என்பதால் பாஜக உடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும். இதனால், சட்டென்று முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது.
ஒரு வேளை அதிமுகவுக்கு விஜய் கிடைத்திருந்தால் பாஜகவிடம் அதிமுக வந்திருக்காது. அதிமுகவின் முதல் தேர்வு விஜய்தான் இருந்திருப்பார். இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
விஜய் திமுகவை தாக்கினார். ஆனால், அதிமுகவை  தாக்கவில்லை. பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்தி வந்தது. எனக்கு தனிப்பட்ட முறையிலும் தகவல் வந்தது. ஏதோ நடப்பதாக என்னால் உணர முடிந்தது.

இதையும் படிங்க: சின்னம்மா இல்ல பெரியம்மா இல்லனு பேசுறது தான் உங்க கொள்கையா? அதிமுக மாஜி MLA-வை கிழித்த பாஜக நிர்வாகி..!



என்னை பொறுத்தவரை எதுவும் இயற்கையான கூட்டணியாக இருக்க முடியாது. விஜய்க்கு 80 - 90 சீட்டுகள் கொடுத்திருந்தால் அதிமுகவில் பல பேருக்கு வேலை இருந்து இருக்காது. முதலில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி எனப் பேசினர். அவருக்கு 90 சீட்டும், துணை முதல்வர் பதவியும் கொடுத்து இருந்தால், வேலுமணி, தங்கமணிக்கு என்ன வேலை இருக்கும்? எடப்பாடி பழனிச்சாமி அதிகாரத்திற்கு பங்கம் வந்துவிடும்.
பிரபலமான தலைவர், வெளியில் போனால் 10 முதல் 20 ஆயிரம் பேர் வரக்கூடிய தலைவருக்கு துணை முதல்வர் என்றால், முதல்வருக்கு என்ன அதிகாரம் இருக்கும்? இவருக்குக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அவருக்கு கூட்டம் கூடும். இந்தக் கூட்டணிக்கு இயற்கை எனக் கூறுவதற்கு எந்த அளவு வாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு இயற்கைக்கு மாறானது எனக் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது" என்று குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Ex. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share