பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்தது எப்படி? கே என் நேருவை சுற்றும் மர்மம்.. சுத்து போட்ட ED..!
பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி ஏல விற்பனைக்கு வந்த பிறகு அதனை அடைத்து சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப்பணம் எங்கிருந்து வந்ததது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது
திருச்சி கண்டோன்மென்ட் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2002-ம் ஆண்டு கே.என்.நேருவின் குடும்பத்தினர் கடன் பெற்றனர். நேருவின் தந்தை பெயரில் செயல்படும் ஜி.நாராயணன் அறக்கட்டளை நிறுவனத்திற்காக நேருவின் தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரூ.109 கோடி கடன் வாங்கி இருந்தனர். இதற்கான அடமானமாக மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட தாயனூர் கிராமத்தில் உள்ள 80 ஏக்கர் நிலம் உள்ளிட்ட கட்டிடங்களின் பத்திரங்கள் வங்கியில் வைக்கப்பட்டன.
கடன் தொகையை கட்டச்சொல்லி வங்கியில் இருந்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும், பணம் செலுத்தத் தவறியதால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி நேரு குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக்கொண்டது இந்தியன் வங்கி. இந்நிலையில், அந்த நிலம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக விற்பனை செய்ய உள்ளதாகவும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்தச் சொத்துக்களின் தற்போதைய மதிப்பு 116 கோடி ரூபாய் என்றும், அதை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் நவம்பர் 11-ம் தேதி காலை மின்னணு ஏலம் மூலம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கான்கிரீட் ரோடு..! வெளிச்சம் போட்டு காட்டிய கே.என்.நேரு.. வந்து குவிந்த ED..!
அதேபோல் கே.என்.நேரு குடும்பம் 40 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கட்டாததால் சொத்து ஜப்தி, ஏல விற்பனைக்கு வந்தது. கனரா வங்கி கடன் ஜப்தி, ஏல விற்பனைக்கு வந்ததது. சில குடும்ப நிறுவனம் மூலம் கிண்டி இந்தியன் வங்கியிலும் கடன்கள் -ஜப்தி, ஏல விற்பனைக்கு வந்தது. இப்படி பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி ஏல விற்பனைக்கு வந்த பிறகு அதனை அடைத்து சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப்பணம் எங்கிருந்து வந்ததது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது
இந்நிலையில்தான் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சகோதரர்கள், சகோதரி, மகன் வீடுகளில் சோதனை நடைபெறும் நிலையில் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைகிறது.. சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு..!