டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். அவருடன் அவரின் மனைவி உஷா வான்ஸ், அமெரிக்க உயர் அதிகாரிகள் உடன் வந்துள்ளனர். துணை அதிபர் ஜேடி வான்ஸ் மனைவி உஷா வான்ஸின் பெற்றோர் இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டவர்கள். துணை அதிபராகியபின் ஜேடி வான்ஸின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரின் மனைவிக்கு இந்தியா சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஜேடி வான்ஸை வரவேற்றார்.
இதையும் படிங்க: திடீரென உடைந்த ரோலர் கோஸ்டர்.. அந்தரத்தில் இருந்து விழுந்த பெண்.. வருங்கால கணவன் முன் நடந்த சோகம்..!
விமான நிலையத்தில் துணை அதிபர் ஜேடி வான்ஸுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது அதை ஜேடி வான்ஸ் ஏற்றுக்கொண்டார். வழக்கமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திற்கும் விமானம், இந்த முறை பாலம் தொழில்நுட்ப விமான நிலையத்தில் துணை அதிபர் ஜேடி வான்ஸ் விமானம் தரையிறங்கியது.
இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்திக்க உள்ளார். இந்த பேச்சின்போது, இரு நாடுகளின் வர்த்தக உறவு, இந்தியா-அமெரிக்க உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது குறித்துபேசப்படும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆகியோருடன் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் கத்ரா ஆகியோரும் பங்கேற்பார்கள்.
துணை அதிபர் ஜேடி வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். துணை அதிபராகியபின் ஜேடி வான்ஸ் இந்தியா வருவது முதல்முறையாகும். அவருடன் உள்துறை, பென்டகன் அதிகாரிகள் உள்பட 5 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர் வந்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸின் இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பிப்ரவரி 13ம் தேதி பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்க கூட்டு அறிக்கையை செயல்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ய இரு தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கும். இரு தரப்பினரும் பரஸ்பர நலன்பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.
புதன்கிழமை (நாளை) துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரின் மனைவியுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க உள்ளார். அங்கு 3 மணி நேரம் செலவிடும் ஜேடி வின்ஸ், ஜெய்பூர் சென்று ஜெய்பூர் அரண்மனையையும் பார்க்க இருக்கிறார். அங்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் ஷர்மா, ஆளுநர் ஹரிபாபு பாக்டேவையும் 22ம்தேதி சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்தவாரை வியாழக்கிழமை இரவு வாஷிங்டனுக்கு ஜேடி வான்ஸ் புறப்படுகிறார்.
துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரின் மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகள் ஆகியோர் இன்று பிற்பகலில் டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல மாலில் இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் வாங்க உள்ளனர். பிரதமர் மோடியுடன் இன்று மாலை துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு, பேச்சுவார்த்தை முடிந்தபின், துணை அதிபர் ஜேடி வான்ஸுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் இரவு விருந்தளிக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து கவலை தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: முதலில் இபிஎஸ், பிறகு அண்ணாமலை, இப்போது செங்கோட்டையன்.. என்ன தான் நடக்கிறது டெல்லியில்..?