×
 

நில பேர மோசடி: ப்ரியங்கா கணவருக்கு சம்மன்... வாயைவிட்ட வதேராவை சுத்துப்போட்ட ED..!

நேற்று அம்பேத்கர் ஜெயந்தியின் போது, ​​அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தை வதேரா வெளிப்படுத்தி இருந்தார்.

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

நில பேர வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக ஏப்ரல் 8 ஆம் தேதியும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வதேரா வரவில்லை. அமலாக்கத்துறை பிறப்பித்துள்ள புதிய சம்மனில், இன்று அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணைக்கு வதேரா ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஆஜராகாததால், இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை... வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!!

2018 ஆம் ஆண்டு ஹரியானாவில் நடந்த ஒரு நில பேர மோசடி யில் ஈடுபட்டதாக வதேரா மீது மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது. நேற்று அம்பேத்கர் ஜெயந்தியின் போது, ​​அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தை வதேரா வெளிப்படுத்தி இருந்தார். வரும் காலங்களில் இதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருந்தார். பொதுமக்கள் விரும்பினால், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனக்கூறி இருந்தார். 

அக்டோபர் 2011-ல், அரவிந்த் கெஜ்ரிவால் (அப்போது அவர் ஒரு ஆர்வலர்) வதேரா அரசியல் ஆதாயங்களுக்காக டிஎல்எஃப் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.65 கோடி வட்டியில்லா கடனைப் பெற்றதாகவும், நிலத்தில் அதிக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.

டிஎல்எஃப் நிறுவனம், வதேராவை ஒரு தனியார் தொழில்முனைவோராகக் கையாண்டதாகவும், வதேராவிடம் இருந்து வாங்கிய நிலத்திற்கு பணம் செலுத்துவதற்காக வர்த்தக நடைமுறைக்கு ஏற்ப வழங்கப்பட்ட 'வணிக முன்பணம்' என்றும் பதிலளித்தது. நிறுவனம் அவருக்கு நிலத்தை தள்ளுபடி விலையில் விற்கவில்லை என்றும், எந்தவிதமான பிரதிபலனும் நடக்கவில்லை என்றும் கூறியது.

நில பேரங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ராபர்ட் வதேரா, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, டிஎல்எஃப் ஆகியோரையும் சிபிஐ விசாரித்து வந்தது.

இது 2013 ஆம் ஆண்டு காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடா அரசின்போது ஹரியானாவின் அமிபூர் கிராமத்தில் நடந்த 50 ஏக்கர் நில அபகரிப்புடன் தொடர்புடையது. 2008 ஆம் ஆண்டு சில மாதங்களுக்குள் இந்த நில ஒப்பந்தத்தின் மூலம் வதேரா ரூ.50 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மோடி, அமித்ஷாவும் தெருத்தெருவா போஸ்டர் ஒட்டி இருக்காங்க..! பிரியங்கா என்ன இளவரசியா..? ராஜ் தீப் அதிர்ச்சி பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share