×
 

லீக் ஆன கோபி நயினார் ஆடியோக்கள்.! கொதிக்கும் வன்னியர்கள்.. கொந்தளிக்கும் பெரியாரியவாதிகள்

பட்டியல் சமூக மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு பெரியாரியவாதிகள் குரல் கொடுப்பதில்லை என தலித் செயல்பாட்டாளர்கள் கொதித்து எழ கருத்து மோதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. 

நடிகை நயன்தாராவை வைத்து அறம் என்ற படத்தை இயக்கி, பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான இயக்குனர் கோபி நாயனார் தற்போது மனுஷி என்ற படத்தை இயக்கி வருகிறார். படங்களை தாண்டி சமூக அக்கறையிலும் ஆர்வம் காட்டும் கோபி நாயனார், காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் களத்தில் நின்று குரல் கொடுத்தார்.

 இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கரடிபுதூர் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் மக்கள் நீண்ட நாட்களாக பட்டா கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் சமீபத்தில் அந்த இடத்தில் மணல் குவாரி அமைக்க இருப்பதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இந்த குவாரி திட்டத்திற்கு எதிராக கோபி நாயனார் பல போராட்டங்களில் நடத்தியதோடு யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டியும் அளித்திருந்தார். அந்த பேட்டி தான் தற்போது அவருக்கு எதிராக விமர்சனங்கள் வர காரணமாக அமைந்து விட்டது.

இதையும் படிங்க: தலித் விடுதலை பேசும் உங்களுக்கு வன்னியர்கள் மீது ஏன் இந்த வன்மம்..? கோபி நயினார் மீது மோகன் ஜி ஆவேசம்..!

குறிப்பாக திமுக அரசின் மீது பல விமர்சனங்களை முன்வைத்த கோபி நாயனார், திமுக அரசுக்கு ஆதரவாக பேசும் பெரியாரியவாதிகள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பது இல்லை? என்ற கேள்வியையும் முன் வைத்தார். அத்தோடு திராவிட பேச்சாளர் மதிவதினியை குறிப்பிட்டு கோபி நாயனார், ''மதிவதனி போன்றவர்கள் திராவிட அரசை காப்பாற்றுவதை மட்டுமே அக்கறையாக இருப்பதாக'' காட்டமாக பேசி இருந்தார்.

திராவிடக் கழகத்தோடு இணைந்து பணியாற்றவர் கோபி நயினார் என்ற நிலையில் தற்போது சில பெரியாரியவாதிகளுக்கு எதிராக அவர் முன் வைத்திருக்கும் விமர்சனங்கள் தீவிரமானதாக பார்க்கப்படுகிறது. பெரியாரிய சிந்தனைகளை ஏற்பதாக கூறிக் கொள்பவர்கள் பட்டியலின சமூகத்தின் பக்கத்தில் உள்ள சமூக மக்களுக்கு எதிராக இருப்பதாக கோபி நயினார் பேசியது சில பெரியாரியவாதிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருந்தது. ஆனால், தந்தை பெரியார் குறித்தோ, அவரது கொள்கை குறித்தோ கோபி நயினார் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

 ஆனாலும்கூட இந்த பேட்டிக்கு பிறகு கோபி நயினார் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து பெரியாரியவாதிகள் கொந்தளிக்கவே, சமூக வலைதளத்தில் விஸ்வரூபமானது. அடுத்தடுத்து கோபி நயினார் பேசியதாக சில ஆடியோக்களும் வெளியாகின. விசிக கட்சியினரை கீழ்த்தரமாக, ஆபாசமாக குறிப்பிட்டு பேசியும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக கோபி நாயனார் பேசியதாகவும் ஆடியோக்கள் வெளியானது. கோபி நாயினார் மீதான விமர்சனங்களும் விஸ்வரூபம் எடுத்தன.

முதலில் பெரியாரியவாதிகள் கோபி நயினாருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வர, ஆடியோ வெளியான பிறகு சில விசிகவினரும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்வினையாற்றுகின்றனர். இன்னொரு பக்கம் கோபி நயினாருக்கு ஆதரவாக பட்டியலின சமூக செயற்பாட்டாளர்கள் பேசவே, இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. பட்டியல் சமூக மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு பெரியாரியவாதிகள் குரல் கொடுப்பதில்லை என தலித் செயல்பாட்டாளர்கள் கொதித்து எழ கருத்து மோதல் இன்னும் தீவிரமாகி உள்ளது. 

இதையும் படிங்க: பத்தமடை பாய், தோடர் சால்வை, காஞ்சி கைத்தறி பட்டு... தொகுதி மறுசீரமைப்பு குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெஷல் பரிசு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share