பணம் கொடுக்கிறியா இல்லையா.. கடை முன் சடலத்தை வீசிய நபர்.. அதிரடி காட்டிய போலீஸ்
தேனி அருகே இலவசமாக மட்டன் தர மறுத்ததை அடுத்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன்பு போட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மணியரசன் இவர் சங்கீதா மட்டன் ஸ்டால் என்ற பெயரில் பல ஆண்டுகளாக அப்பகுதியில் ஆடு கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் எந்த வேலையும் செய்யாமல் கடைக்காரர்களை மிரட்டி பணம் வாங்குவது கடையிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அத்துமீறல் செயல்களை வழக்கமாகக் கொண்ட குமார், இன்று எல்லையை கடந்த செய்த செயல் அப்பாவி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மணியரசன் கடைக்கு சென்ற குமார் பணம் கேட்டு மணியரசனை மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வந்ததால் இருவருக்கும் அவக்குவாதம் ஏற்பட்டு மணியரசன் பணம் தர முடியாது எனக்கூறி குமாரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் செய்வது அறியாமல் பல்வேறு வசை பாடலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் கேமிங்-ஆல் அதிகரிக்கும் தற்கொலைகள்.. புதிய கட்டுப்பாடுகள் விதித்து அதிரடி காட்டிய ஆணையம்..!
குறிப்பாக பணம் கொடுக்காவிட்டால் மலத்தை கரைத்து கடையில் ஊற்றி விடுவேன், பிணத்தை எடுத்து வந்து கடை முன் போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த மணியரசன் ஒரு கிலோ ஆட்டு குடலை குமாருக்கு கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த குமார் மட்டன் கேட்டால் ஆட்டின் குடலையாக கொடுக்கிறாய் என ஆவேசமடைந்து குடலை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு, உன்னை என்ன செய்கிறேன் பார் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இது மட்டுமின்றி சிறிது நேரம் கழித்து பழனிச்சட்டி சுடுகாட்டிற்கு சென்ற குமார் அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி தலையில் சுமந்தபடி தெருக்கள் வழியாக நடந்து சென்று மணியரசன் கடை முன்பாக அந்த சடலத்தை வீசி எறிந்துள்ளார்.
இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர். தொடர்ந்து மணியரசன் அளித்த புகாரி அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சடலத்தை மீண்டும் சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இது போன்ற குற்ற சம்பவங்களில் அவ்வப்போது குமார் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் முழுவதும் புகார் அளித்ததன் அடிப்படையில் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணம் கொடுக்க மறுத்ததால் சடலத்தை எடுத்து இறைச்சி கடை முன் வீசி சென்ற நபரால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.
இதையும் படிங்க: உதறித் தள்ளிய பாஜக... மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமாவின் பகீர் பின்னணி..!