×
 

ரூட்டை மாற்றும் தேமுதிக..? மு.கஸ்டாலின்- பிரேமலதா திடீர் பாசம்..? எடப்பாடியாருக்கு ரிவெஞ்ச்..?

சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வாங்கி விட வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கணக்காக இருந்தது.

பட்ஜெட்டுக்கு பாராட்ட தெரிவித்தது, பிறந்தநாளுக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்தது என திமுகவுடன், பிரேமலதா விஜயகாந்த் நெருக்கம் கட்டத் தொடங்கி இருப்பது கூட்டணி கணக்கு மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தனது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில்,  வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பது உறுதியா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் கூட்டணி  குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிறந்த நாள் என்று அறிவிப்பதாக கூறினார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது என்று பதில் சொன்ன தொனியில் பிரேமலதாவின் பேச்சை எடுத்துக் கொண்டாலும், இதற்கு முன்பு வரை அதிமுகடன்தான் கூட்டணி என உறுதியாக கூறி வந்த பிரேமலதாவின் பேச்சில் மாற்றம் தென்படுவதுதான் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்டாலின், உதயநிதியின் தூக்கத்தை கெடுக்கும் பாஜக..! கேப் விடாமல் அடித்து ஆடும் அரசியல்..!

அதேபோல திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் ஒரு சேரக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பிரேமலதா மட்டும் பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியதும் யோசிக்க வைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தொடங்கிய அதிமுக- தேமுதிக கூட்டணி தற்போது வரை நீடித்து வந்தாலும் ராஜ்யசபா சீட் காரணமாக கூட்டணி உறவில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வாங்கி விட வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கணக்காக இருந்தது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு தேமுதிகவுக்கு மனக்காயத்தை ஏற்படுத்திய சூழலில், சமீப காலமாக திமுக மீது விமர்சனத்தில் பிரேமலதா மென்மை கட்டுவதும், பாராட்டி புகழ்வதும் கூட்டணி கணக்கு மாறுகிறதா? என்கிற கேள்வியை நோக்கி நகரை வைத்துள்ளது.

திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் மொத்தப்பேரும் விமர்சித்து வரும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் வரவேற்பு கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும்கூட, எதிரணியினரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு திமுக காய்நகர்த்தி வருகிறது. முதலில் பாமக மீது கவனமாக இருந்த திமுக, திருமாவளவனை கருத்தில் கொண்டு அந்த முடிவிலிருந்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டுவர திமுகவும் ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான், எப்போதும் இல்லாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் அழைத்து பிரேமலதா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கிடைக்காத நிலையில், அந்த கட்சியின் வாக்கு வங்கியும் பெருத்த அளவில் சரிந்து வருகிறது.

 

ஒரு காலத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான திமுகவையே ஓரம் கட்டி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது. ஆகையால், வருகிற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து, எம்.எல்.ஏ அங்கீகாரம் பெற்று, மீண்டும் கட்சியை மீட்டெடுக்கலாம் என்ற கணக்கில் தேமுதிக யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடியிசம்.. அவமானமாக இல்லையா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share