90 லட்சம் பேர் கூடுதலாக ஐடி ரிட்டன் தாக்கலால் ரூ.9,100 கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்..!
கடந்த 4 ஆண்டுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.9118 கோடி வரிவசூல் கிடைத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமானவரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரிட்டன் தாக்கல் செய்யும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு, ஐடிஆர்-யு என்ற வாய்ப்பை வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு ஏற்படுத்தியது. இதன்படி 2 ஆண்டுகள்வரையிலான வருமானவரி ரிட்டனை தாக்கல் செய்ய வாய்ப்பளித்தது. 2025 நிதி மசோதா மூலம், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பை மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மத்திய அரசு'-க்கு மாறிய மு.க.ஸ்டாலின்… ஒன்றிய அரசு அழைப்பு வீராப்பு என்னாச்சு..?
இதுகுறித்து மக்களவையில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்தரி நேற்று பேசுகையில் “ நடப்பு நிதியாண்டு அல்லது அசெசஸ்மெண்ட் ஆண்டு 2024-25ல் புதுப்பிக்கப்பட்ட வருமானவரி ரிட்டன்களை பிப்ரவரி 28ம் தேதிவரை 4.64 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.431.20 கோடி வரி செலுத்தியுள்ளனர்.
2023-24ம் நிதியாம்டில் 29.79 லட்சத்துக்கும் அதிகமானோர் ஐடிஆர்-யு படிவத்தை தாக்கல் செய்தனர், இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.2,947 கோடி கிடைத்தது. 2022-23ம் ஆண்டில் 40.07 லட்சம் பேரும், 2021-22ம் ஆண்டில் 17.24 லட்சம் பேரும் ஐடிஆர்-யு ரிட்டனைத் தாக்கல் செய்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.கூடுதலாக 2022-23ம் ஆண்டில் ரூ.3940 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1,799.76கோடியும் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 2021 முதல் 2024-25 வரை கூடுதலாக 91.76 லட்சம் பேர் ஐடிஆர்-யு படிவம் தாக்கல் செய்தனர் இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.9118 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!