சீமான் ஏன் நிர்மலாவை சந்திக்க வேண்டும்..? 'சசிகலாவையே வீழ்த்திய எங்களால் நேரடியாக மோடியுடனே பேச முடியும்..!'
தம்பி சந்திப்பான் என்றால் நேரடியாக சந்திப்பான். பிரதமர் மோடியே நேரடியாக சீமானிடம் பேசுவார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு தனித்தனியாக சந்திப்பு நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் இதனை அடியோடு மறுத்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து அவர், ''சந்தித்தால், சந்தித்தேன் என சொல்லப்போகிறேன். அதில் எனக்கு பயமா?, தயக்கமா? சும்மா நீங்களே சந்தித்து இருப்பாரா என சொல்லி வருகிறீர்கள். ரஜினி என்ன பிஜேபியிலா உள்ளார். அவரை நான் அன்பின் நிமித்தமாக சந்தித்தேன். நீங்களாக கற்பனை செய்து கொண்டு இருக்காதீர்கள். வேதாரணியத்தில் வேட்பாளரை அறிவித்ததாக நீங்கள்தான் சொல்லி இருந்தீர்கள். தனித்து போட்டியிட போகிறேன் என்று இதில் தெரிகிறது. கூட்டணி வைக்க போகிறேன் என்றால் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்கப் போகிறேன்" என கூறி உள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்...' டைகர் வைகோவை டரியலாக்கிய நிர்மலா..! உடனே சென்னை வந்து கெத்து..!
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''அறிவின் மிக்க அரசியல் விவாசகர்கள் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை வைத்து பேசுவது தர்மமாகாது, அறமாகாது. இவர்களுக்கு எல்லாம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சீமான் தான் பெரியவன்... நாலு பேரை அடித்து நிற்பேன். நான் புலி, தனியாகத்தான் வேட்டையாடுவேன் என்று சொல்லும் போது, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும்போது இவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம்.
இது தவறு. திருந்த வேண்டும். சீமான் விவாகரத்தில் நான் சொல்வதெல்லாம் சரியாகத் தான் வந்து கொண்டிருக்கிறது. தம்பி சந்திப்பான் என்றால் நேரடியாக சந்திப்பான். பிரதமர் மோடியே நேரடியாக சீமானிடம் பேசுவார். சசிகலாவை வீழ்த்திய எங்களுக்கு சீமானை நேரடியாக பிரதமர் மோடியிடம் பேச வைக்க முடியாதா? முடியும். ஆனால் அவர் தனியாக போகிறேன் என்கிறார்.
அப்படி இருக்கும்போது நாம் ஏன் அவரை காயப்படுத்த வேண்டும்? அவர் அண்ணா திமுக வேண்டாம்... பாஜக வேண்டாம், காங்கிரஸ் வேண்டாம், திமுக வேண்டாம் என தனித்துப் போட்டியிடுகிறார். அதை அவர் நம்புகிறார். ஒன்றிலிருந்து எடுத்து வந்தவன் எட்டுக்கு வந்தவன், எட்டிலிருந்து 18க்கு வர முடியும் என்று நம்புகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி பலவீனப்படுத்தி நாடாரல்லாத, வன்னியர் அல்லாத, வெள்ளாளர் கவுண்டர் அல்லாதவர்களை வைத்து எடப்பாடி பழனிச்சாமியை பலவீனப்படுத்த முடியும் என்று நம்புகிறார். விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கிலும் நிற்காத எடப்பாடி பலவீனப்படுத்த முடியும் என்று நம்புகிறார். ஊர்ஜிதபடாத தகவல்களை வைத்து அவரை காயப்படுத்துவது அறமாகாது. தர்மமாகது'' என ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்..! தடுத்துப் பார் வைகோவுக்கு நிர்மலா சவால்