×
 

தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!

தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள் என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஸா அபியான் (எஸ்எஸ்ஏ) நிதியை முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்குங்கள் என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத், தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ திட்டத்தையும் ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்த சமக்ரா சிக்ஸா அபியான் திட்ட நிதியை தமிழக அரசுக்கு வழங்க முடியாது என்று சமீபத்தில் தெரிவித்தார். இதனால், மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவே நிதியை வழங்க பரிந்துரை செய்துள்ளது. கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த அறிக்கையை மாநிலங்களவையில் நிலைக்குழு நேற்று தாக்கல் செய்தது.

இந்த சமக்ரா சிக்ஸா திட்டத்தில் மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1000 கோடியும், கேரள மாநிலத்துக்கு ரூ.859.63 கோடியும், தமிழக அரசுக்கு ரூ.2152 கோடியும் மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இதையும் படிங்க: 90 லட்சம் பேர் கூடுதலாக ஐடி ரிட்டன் தாக்கலால் ரூ.9,100 கோடி வசூல்.. மத்திய அரசு தகவல்..!

36 மாநிலங்களில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.  நிலையில்  3 மாநிலங்கள் மட்டும் மறுக்கின்றன. தேசிய அளவில் மதிப்பீடு மற்றும் பாடத்திட்டத்தில் சமநிலையை உருவாக்கும் வகையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி,தேசிய கல்விக் கொள்கையில் முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்கி வருகின்றன. தேசியக் கல்விக்கொள்கையில் பிஎம் ஸ்ரீ என்பது மாதிரிப் பள்ளிகள், இதில் எஸ்எஸ்ஏ என்பது ஒரு திட்டம். தேசியக் கல்விக் கொள்கையை அடைய எஸ்எஸ்ஏ பயன்படுகிறது என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 3 மாநிலங்களும் கையெழுத்திடவில்லை. இதனால், மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ திட்ட மானியங்களை நிறுத்தியுள்ளது. இதுதான் காரணம் என்று தோன்றுகிறது. இருப்பினும், இது உண்மைக்கு புறம்பானது அல்லது நியாயமானதும் அல்ல என்ற கருத்தை குழு எடுக்கிறது என்று குழு குறிப்பிட்டது.

ஒவ்வொரு குழந்தைக்கான கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்கை அடைய மாநிலங்களுக்கு பிஎம் ஸ்ரீ திட்டமும், எஸ்எஸ்ஏ திட்டமும் பயன்படும். கல்வி உரிமைச் சட்டத்தில் அமல்படுத்தும் ஒரு திட்டம்தான் எஸ்எஸ்ஏ. ஆனால், தேசியக் கல்விக் கொள்கையை மீறி செயல்பட முடியாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, தமிழகம், மேற்கு வங்கத்தில் வலுவான கல்விப் பின்புலம் மக்களிடம் இருக்கிறது, அதிகமா குழந்தைகள் பள்ளி செல்கிறார்கள், தேசிய கல்வி சராசரியைவிட இந்த மாநிலங்களில் அதிகம். ஆனால்,  எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வங்காமல் இருந்தால், பள்ளியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி, மாணவர்கள் அறிக்கை ஆகியவற்றில் முன்னோக்கி செல்வதில் சிக்கல் ஏற்படும். மத்தியஅரசின் நிதி கிடைக்க தாமதமாகியதால் இந்த மாநிலங்கள் தங்களின் சொந்த வருமானத்தைப் பயன்படுத்தி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகின்றன. 

2024-25ம் நிதியாண்டுக்கு தமிழகம் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.3586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் மத்திய அரசு ரூ.2152 கோடி பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை நிறுத்துவதால், ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆடிஇ சட்டத்தை அமல்படுத்துவது, வெளியூரிலிருந்து வரும் மாணவர்களை அழைத்துவர போக்குவரத்து ஏற்பாடு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மத்திய அரசு'-க்கு மாறிய மு.க.ஸ்டாலின்… ஒன்றிய அரசு அழைப்பு வீராப்பு என்னாச்சு..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share